பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர் சிங் பங்கேற்கமாட்டார் என தகவல்!!
அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது. நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி, மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Raveen Thukral, Media Adviser to Punjab CM: CM Amarinder Singh to not attend PM Narendra Modi's oath ceremony today. (file pic) pic.twitter.com/p20tVZMtCh
— ANI (@ANI) May 30, 2019
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர் சிங் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு முன்னதாக, மேற்கு வாங்க முதல்வர் மம்தா மற்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மோடியின் பதவியேற்ப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை ஈ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.