BJP-க்கும், தேசமக்களுக்கும் இடையே நிகழ்ந்த அற்புதமான வேதியியல் மாற்றம் தான் மக்களவை தேர்தலின் வெற்றி!!
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அபார வெற்றியையடுத்து, தமது சொந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசிக்கு சென்றார். அப்போது, வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், வெற்றிக்கு பாடுபட்ட பாஜக தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் உரையாற்றிய பிரதமர் மோடி.
இதுகுறித்து அவர் பேசுகையில்; கட்சித் தொண்டர்களின் மகிழ்ச்சியையே எனது தாரக மந்திரமாக கொண்டுள்ளேன். என்னை பாஜக தொண்டனாக உணர்வதில் பெருமை கொள்கிறேன். கட்சியின் சித்தாந்தங்களை, கொள்கைகளை நாட்டு மக்களிடம் பரப்புவதில் கட்சித் தொண்டர்கள் வினைஊக்கிகளாக செயல்பட்டு வருகின்றனர். போற்றுதலுக்குரிய இப்பணியின் காரணமாகவே, மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவிவத்தார்.
மேலும், தான் வாரணாசி மக்களின் மீது முழுநம்பிக்கை வைத்து போட்டியிட்டதாக தெரிவித்த அவர், காசி தமக்கு அமைதியையும் வலிமையையும் தருவதாக கூறினார். உண்மையிலேயே ஜனநாயகப்பூர்வமான கட்சி என ஒன்றிருக்குமானால் அது பாஜகதான் எனவும் மோடி தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் 2014, 2017, 2019 ஆகிய மூன்று தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகும், அரசியல் கணக்குகளை தாண்டி செயல்பட்ட கெமிஸ்ட்ரியை அரசியல் வல்லுநர்கள் புரிந்துகொள்ளவில்லை என பிரதமர் கூறினார். வேதியியல் கணிதத்தை தோற்கடித்திருந்தாலும், கடின உழைப்பு என்பதற்கு மாற்றோ ஈடு இணையோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார். கடின உழைப்பும் தொலைநோக்கு பார்வையும் எத்தகைய அபிப்ராயத்தையும் மாற்றும் வல்லமை கொண்டவை என்று பிரதமர் மோடி கூறினார்.
PM: After the campaign, I used to think of coming here but I used to recall your orders. Maine socha ye nahi to koi aur baba. Rarely is a candidate so relaxed, as I was, during elections & the results. Your hardwork was the reason for it. I was relaxed so I went to Kedarnath. https://t.co/WujSBxgkyC
— ANI UP (@ANINewsUP) May 27, 2019