DMK மூத்தத் தலைவர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி

இன்று காலை தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உற்சாகமாகத் தொடங்கியபோதிலும் இன்னும் முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லை. பலர் முன்னேற, சிலர் பின்னேற என இழுபறி காட்டிக் கொண்டிருந்த நிலையில் சற்றே தெளிவு ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 2, 2021, 11:10 PM IST
  • DMK துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி
  • எட்டாக்கனியோ என்றே தோன்றிய தேர்தல் கனி துரைமுருகனுக்கு இனிப்பாகவே இருக்கிறது
  • அமைச்சராகிறார் துரைமுருகன்
DMK மூத்தத் தலைவர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி title=

சென்னை: இன்று காலை தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உற்சாகமாகத் தொடங்கியபோதிலும் இன்னும் முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லை. பலர் முன்னேற, சிலர் பின்னேற என இழுபறி காட்டிக் கொண்டிருந்த நிலையில் சற்றே தெளிவு ஏற்பட்டுள்ளது.

வெற்றிப் பாதையில் பயணிக்கும் திமுகவின் முக்கியமான மூத்தத் தலைவர் துரைமுருகன், தான் போட்டியிட்ட காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவை சந்தித்திருந்தார். 

தற்போது காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read | கோவை தெற்குத் தொகுதியில் வானதி வெற்றி, கமலஹாசன் தோல்வி

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார், ஒரு கட்டத்தில் அவரது வெற்றி எட்டாக்கனியோ என்றே தோன்றியது. இறுதியில் தேர்தல் கனி துரைமுருகனுக்கு இனிப்பாகவே இருக்கிறது.

திமுகவின் முன்னணி வேட்பாளரான துரைமுருகனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமுசில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஆரம்பம் முதலே காட்பாடியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், துரைமுருகன் 52,526 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றதக கூறப்பட்டது.

மூத்தத் தலைவரும், ஏற்கனவே பல துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவருமான துரைமுருகன் அமைச்சராவார் என்பதும், முக்கிய இலாகா அவருக்கு ஒதுக்கப்படும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News