DMK chief MK Stalin: வெற்றி நமதே! கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்போம்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வெற்றி நடைபோடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றி நிச்சயம், கடமை, கண்ணியம் காப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அறிக்கையின் முழு விவரம்: 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 2, 2021, 02:54 PM IST
  • வெற்றி நமதே! கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்போம்…
  • வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்
  • முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது
DMK chief MK Stalin: வெற்றி நமதே! கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்போம்… title=

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வெற்றி நடைபோடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றி நிச்சயம், கடமை, கண்ணியம் காப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அறிக்கையின் முழு விவரம்: 

“வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்; முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது” 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 30 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. பெரும்பான்மைத் தொகுதியில் தி.மு.கழகக் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக மாலையில் இருந்து வரத் தொடங்க உள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது தி.மு.க.தான் என்பது உறுதியாகிவிட்டது.

Also Read | அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்!

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது குளறுபடிகள் நடந்து விடாமல் தடுக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்து விட முடியாது என்றாலும் - எங்காவது ஒரு அதிகாரி - அதைச் செய்து விடக் கூடும் என்பதால் அதிக கவனம் அவசியம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

ஏதேனும் காரணம் காட்டி வெற்றிச் சான்றிதழை வழங்கக் காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது. வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடித்து, வெற்றிச் சான்றிதழைப் பெறுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

Also Read | Election Result 2021: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

நமது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட வெற்றியாகும். இருப்பினும் கொரோனா என்ற பெருந்தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். பெருந்தொற்று தொற்றிக் கொள்ளவும், பரவவும் காரணம் ஆகிவிடக்கூடாது. பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம்!

Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News