NET 2021 தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது யுஜிசி.
கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் NET தேர்வுகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆணையம் ஆண்டுதோறும் பல்வேறு உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.
ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் நெட் (NET) தேர்வுகள் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு திட்டமிட்டப்படி தேர்வுகளை நடத்த முடியாததால் மாற்று தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தேர்வு தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் மாதம் 19, 21, 26 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது.
ALSO READ: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நெறிமுறைகள் விரைவில் வெளிவரும்: அன்பில் மகேஷ்
பின்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வுகள் மே மாதம் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தன. கொரோனா (Coronavirus) இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் தேதி குறிப்பிடாமல் தேர்வை தள்ளிவைத்தது யுஜிசி.
இந்நிலையில் டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021க்கான 2 NET தேர்வுகளும் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 முதல் 11 வரை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கு செப்டம்பர் 5 வரை UGCNET.NTA.NIC.IN என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத பதிவு செய்வதற்கான செயல்முறை இதோ:
Step 1: ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கு செல்லவும்
Step 2: ‘Apply' இணைப்பைக் கிளிக் செய்யவும்
Step 3: தேவையான விவரங்களை உள்ளிட்டு ‘submit’ என்பதைக் கிளிக் செய்யவும்
Step 4: படிவத்தின் கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பிக்கவும்
Step 5: படிவத்தின் நகலை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக அதை உங்களுடன் வைத்திருங்கள்.
ALSO READ: தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR