புதுடெல்லி: 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிந்துவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (University Grants Commission) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, இந்த ஆண்டிற்கான கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ஆகஸ்ட் 31, 2021க்குள் முடிக்க வேண்டும். புதிய கல்வி அமர்வு அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கும்.
ஜூலை 16, 2021 தேதியிட்ட உச்ச நீதிமன்ற சுற்றறிக்கையின் படி, அனைத்து மாநில வாரியங்கள் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவற்றின் முடிவுகள் 2021 ஜூலை 31 க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை யூஜிசி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர் செர்க்கை ஆகஸ்ட் 1, 2021 முதல் தொடங்கிவிடும்.
University Grants Commission has issued guidelines on examinations& academic calendar in view of COVID to all universities&colleges
Guidelines state that admissions to first-year courses for 2021-22 to be completed by no later than Sept 30& academic session to commence by Oct 1 pic.twitter.com/aAQrS9xWfq
— ANI (@ANI) July 17, 2021
2021 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சேர்க்கை செயல்முறையை முடித்து, புதிய அமர்வை 2021 அக்டோபர் 1 முதல் தொடங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும்.
புதிய சேர்க்கைக்கான ஆவணங்கள் டிசம்பர் 31, 2021 க்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்கல், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தகுதி (வகுப்பு 12) முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டால், உயர் கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 18 முதல் புதிய கல்வி அமர்வைத் திட்டமிடலாம்.
கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், அக்டோபர் 31ஆம் தேதி வரை தங்கள் சேர்க்கையை திரும்பப் பெற்றால், அதற்கு கல்வி நிறுவனங்கள் எந்தவொரு ரத்து கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என்றும் யுஜிசி கூறியுள்ளது. தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இந்த சலுகை மாணவர்களுக்கு கிடைக்கிறது. மேலும், 2021 டிசம்பர் 31 வரை சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு, ரத்து கட்டணமாக 1000 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
Also Read | ITR Filing ALERT: வரி செலுத்துவோருக்கு இனி சிக்கல் இல்லை!
கற்பித்தல் முறையை, மாநிலங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்றும் யுஜிசி தெரிவித்துவிட்டது. இதற்கிடையில், ஒரு சில மாநிலங்களின் கல்வி வாரியங்கள் ஏற்கனவே 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்துள்ளன, சில மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஜூலை 31 க்குள் முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை மூடப்பட்டு உள்ளன. கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR