மாதாந்திர பூஜையின் போது பொதுமக்களுக்காக சபரிமலை கோயில் திறக்கப்படாது, அதன் திருவிழாவும் ரத்து செய்யப்படும் என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சபரிமலை தந்திரி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்துடன் சந்திப்பு நடத்திய பின்னர் இந்த முடிவை அறிவித்தார்.
கேரள யானை மரணம் ஒரு விபத்தாக இருக்கலாம்: சுற்றுச்சூழல் அமைச்சகம்...
அய்யப்பா ஆலயம் அதன் மாதாந்திர பூஜைக்காக வரும் ஜூன் 14 மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஜூன் 19 அன்று இரவு 10 மணிக்கு பூஜூ நிறைவடையும் வரை இது ஒரு உள்நாட்டு விவகாரமாக இருக்கும். அதாவது இதன்போது ஆலையத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டர் என தகவல்கள் தெரிவிக்கிறது.
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் என் வாசு ஒரு நாள் முன்பு சபரிமலை கோயில் திருவிழா ஜூன் 19 முதல் தொடங்கும் என்று அறிவித்ததை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
"சபரிமலை கோயில் ஜூன் 14 மாலை மாத பூஜைக்காக திறக்கப்படுகிறது. கோயிலின் 'தந்திரிகள்' இருவருடனும் நாங்கள் விவாதித்தோம். அவர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இப்போதைக்கு, ஜூன் 19 முதல் திட்டமிடப்பட்ட மாத பூஜை மற்றும் கோயில் திருவிழாவை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.," என்று வாசு குறிப்பிட்டுள்ளார்.
"தற்போதைய அட்டவணையின்படி, கோயில் திருவிழா ஜூன் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது, அதற்கு முன் ஜூன் 14 முதல் மாதாந்திர பூஜை நடைபெறும். அராத் விழா ஜூன் 20-ஆம் தேதி பம்பா ஆற்றில் நடத்தப்படும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா எதிரொலி: கேரளாவில் புதிய கல்வியாண்டு தொடங்கம்; ஆன்லைனில் வகுப்புகள்...
CPI(M) தலைமையிலான கேரள அரசு, அரசு நிதியுதவி கொண்ட தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களை பக்தர்களுக்காக திறக்க அனுமதித்ததாக பாஜக முன்பு விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேவஸ்தான நடவடிக்கை சந்தேகங்களை எழுப்புகிறது என்று மத்திய வெளியுறவு இராஜாங்க அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான முரளிதரண் தெரிவித்திருந்தார். கேரளாவில் மட்டும் சுமார் 3,000 கோவில்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.