அபிஷேகத்தின் ஆற்றல் மற்றும் பயன்கள் பற்றித் தெரியுமா?

அபிஷேகத்தின் ஆற்றல் மற்றும் பயன்கள் பற்றித் தெரியுமா? 16 வகையான அபிஷேகங்கள் செய்வதன் காரணம் என்ன?

Last Updated : Feb 4, 2021, 01:30 AM IST
அபிஷேகத்தின் ஆற்றல் மற்றும் பயன்கள் பற்றித் தெரியுமா?   title=

இந்து மதக் கடவுள்களுக்கு அபிஷேகங்கள் செய்வது சிறப்பானது. அதிலும், மும்மூர்த்திகளில் முதல்வனான சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிவன் அபிஷேகப் பிரியர் என்றும் கூறுவர். முக்கண் முதல்வனாகும் சிவனின் நெற்றிக்கண், தீப்பிழம்பாக இருப்பதால், அவரது உடல் உஷ்ணமாக இருக்கும். 

சிவனாரின் உடலை குளிரச் செய்தால் அவர் மனமும் குளிரும் என்பதால்  சிவன் கோவில்களில் அபிசேகம் செய்யப்படுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.

Also Read | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.

எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  

Also Read | தேவலோக மரங்கள் எவை? அதன் சிறப்புகள் என்ன தெரியுமா?

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. 

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் எவை தெரியுமா?

எள் எண்ணெய் 
பஞ்ச கவ்வியம் 
மாவு வகைகள் 
மஞ்சள் பொடி 
பசும்பால் 
தயிர் 
தேன் 
நெய் 
நெல்லி முள்ளிப்பொடி 
கரும்புச்சாறு 
பன்னீர் 
அன்னம் 
வாசனை திரவிய தீர்த்தம்

Also Read | பூர்வ ஜென்ம பலன் என்பது நம்பக்கூடியதா? - இதோ உங்களுக்கான பதில்..

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News