லாக்கர் ஒப்பந்த விதிகள்: வங்கிகளின் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், லாக்கர் பயன்படுத்துபவர்களில் 36 சதவீதம் பேர் வங்கி லாக்கர்களை மூடிவிட்டனர். 16 சதவீதம் பேர் சிறிய அளவிலான லாக்கருக்கு மாறுகின்றனர். உங்களுக்கு ஏதேனும் வங்கியில் லாக்கர் இருக்கிறதா? இருந்தால், இந்தச் செய்தியைப் அறிந்து கொள்வது அவசியம். அதிகரித்து வரும் KYC தொந்தரவுகள் மற்றும் லாக்கர் கட்டணங்களால், பாதிக்கும் மேற்பட்ட வங்கி லாக்கர் வைத்திருப்பவர்கள் அதை மூட நினைக்கிறார்கள்.
அண்மையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்ட ஒரு சர்வேயில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, சில வாடிக்கையாளர்கள், பெரிய லாக்கரில் இருந்து சிறிய லாக்கருக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன
11000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வங்கிகளின் தொடர் கட்டண உயர்வால், லாக்கர் பயன்படுத்துபவர்களில் 36 சதவீதம் பேர் வங்கி லாக்கரை மூடியுள்ளதாக கூறப்பட்டது. அதோடு, பதினாறு சதவீதம் பேர் சிறிய அளவிலான லாக்கருக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளனர். இதைத் தைவ்ர, நான்கு சதவீதம் பேர் லாக்கரை மூடுவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வங்கி பாதுகாப்பு லாக்கர்களுக்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன், வங்கிகள் வாடிக்கையாளரை காகிதப்பணிக்கு தேவையான KYC ஆவணங்களுடன் கிளைக்கு வந்து புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்படி அறிவுறுத்தியுள்ளன. மேலும், லாக்கர் கட்டணம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியுடன் லாக்கருக்கான புதிய ஒப்பந்தத்தில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும். லாக்கர் கட்டண உயர்வு காரணமாக, கடந்த மூன்றாண்டுகளில் கணக்கெடுக்கப்பட்ட லாக்கர் வைத்திருப்பவர்களில் 56 சதவீதம் பேர் லாக்கர் தொடர்பான தங்கள் முடிவை மாற்றி விட்டார்கள்.
மேலும் படிக்க | RBI புதிய வங்கி லாக்கர் விதிகள்: வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம், வங்கிகளுக்கு கெடுபிடி
டிசம்பர் 31க்குள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்
வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான கடைசி தேதியை ரிசர்வ் வங்கி சமீபத்தில் டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்தது. இதற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் ஜனவரி 1, 2023க்குள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்படிருந்தது. . புதிய விதியின்படி, லாக்கரில் எந்த மாதிரியான பொருட்களை வைக்கலாம் என்பதை வங்கிகளும் வாடிக்கையாளர்களும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வங்கிகளில் மதிப்புமிக்க பொருட்களை வைப்பதற்காக லாக்கர் வசதியைப் பெறுபவர்களிடம் இருந்து வங்கிகள் புதிய வகையான கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியுள்ளன. அதேபோல், புதிய விதியின்படி, ஒரு நபர் தனது பொருட்களை வங்கி லாக்கரில் வைத்திருந்து, அது சேதமடைந்தால், நஷ்டஈட்டைச் செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும்.
ரிசர்வ் வங்கியின் விதி என்ன?
புதிய வங்கி லாக்கர் விதிகளில் ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) பல மாற்றங்கள் செய்துள்ளது. புதிய விதியின்படி, ஒருவர் தனது பொருட்களை வங்கி லாக்கரில் வைத்திருந்து, அது சேதமடைந்தால், வங்கி நஷ்டஈடு செலுத்த வேண்டும்,
லாக்கரின் வருடாந்திர வாடகையைப் போல 100 மடங்கு வரை வங்கி நஷ்ட ஈடு செலுத்த வேண்டும். அதேபோல, வங்கியில் தீ விபத்து, திருட்டு போன்ற அசம்பாவிதம் நடந்தால், அதனால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை வங்கியே ஈடு செய்யும்.
மேலும் படிக்க | கோவிட்-19 கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நிலைமை மோசமாகிறது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ