விண்ணைத் தொடும் பூண்டு விலை! கிலோ 400 ரூபாய் உச்சமடைந்த மருத்துவ மசாலா

Garlic Rate Skyrocketed: தக்காளி மற்றும் வெங்காயத்தை அடுத்து, நாடு முழுவதும் பல நகரங்களில் பூண்டு விலை கடந்த சில நாட்களாக இரு மடங்காக உயர்ந்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 24, 2023, 05:29 PM IST
  • பூண்டு விலை உயர்வு
  • விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது?
  • ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பூண்டு
விண்ணைத் தொடும் பூண்டு விலை! கிலோ 400 ரூபாய் உச்சமடைந்த மருத்துவ மசாலா title=

பூண்டு விலை உயர்வு: தக்காளி, வெங்காயம் விலைகள் மிகவும் அதிகமானது போல், இப்போது பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது.  பல இடங்களில் விலை கிலோ ரூ. 400ஐத் தாண்டுகிறது. பருவமழையின் தாக்கத்தால், பூண்டு இருப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தக்காளி மற்றும் வெங்காயத்தை அடுத்து, நாடு முழுவதும் பல நகரங்களில் பூண்டு விலை கடந்த சில நாட்களாக இரு மடங்காக உயர்ந்துள்ளது.

மோசமான வானிலைக்கு மத்தியில் பயிர் சேதம் காரணமாக மசாலா வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சில பகுதிகளில் பூண்டு விலை கிலோ 400 ரூபாயை தாண்டியுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. வழக்கமான விலையைவிட, பல்வேறு சந்தைகளில் மொத்த விலையும் 130-140 கிலோ வரை உயர்ந்துள்ளது. இருப்பினும், நாட்டில் உள்ள மொத்த சந்தையில் உயர்தர பூண்டு விலை ஒரு கிலோ ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.  

உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பூண்டு மிகப்பெரிய நன்மையை செய்கிறது.  பூண்டில் உள்ள ப்ரீபயாடிக் பண்புகள் குடல் நுண்ணுயிர்களின் திறனை அதிகரிக்கிறது.  பூண்டு சாறு உங்கள் இரத்த நாளங்களை பாதிக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவும். 

மேலும் படிக்க | தொப்பை அதிரடியாக குறைய இந்த ஸ்பெஷல் தண்ணீரை குடியுங்கள் போதும்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  பூண்டில் வைட்டமின் பி12 உள்ளது, இதனை உட்கொள்வதால் உங்கள் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.  இது தவிர பூண்டில் சல்பர் இருப்பதால் நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுக்கள் உருவாகின்றது.  

பூண்டு, பல்வேறு நோய்களை தீர்க்கும் சஞ்ஞீவனி மருந்தாக செயல்படுகிறது. தினசரி பூண்டு பயன்படுத்தும் மக்களுக்கு இந்த விலையேற்றம் மிகவும் சிரமத்தைக் கொடுத்துள்ளது.

பூண்டு விலை உயர்வதற்கான காரணம்
பருவமழையின் போது போதிய மழையில்லாத காரணத்தால் பூண்டு கையிருப்பு மற்றும் குறைந்த உற்பத்தி காரணமாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் மிகாங் சூறாவளி காரணமாக பருவமழை மற்றும் சீரற்ற வானிலை ஆகியவை பயிர்களை அழித்தது. 

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு சக்தி வரை! கருப்பு பூண்டின் மேஜிக் மகிமைகள்!

சந்தைக்கு புதிய விளைச்சல் வரும் வரை, மாத இறுதி வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என சந்தை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். பூண்டு தவிர, வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையும் இந்த பருவமழையின் போது குறைந்த மழை காரணமாக சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது. இந்த ஆண்டு ஜூலை மாதம் தக்காளி விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிலோ ரூ.250-ஐ தொட்டது. இதேபோல், வெங்காயத்தின் விலையும் சமீபத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.60 வரை உயர்ந்தது.

பூண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது?
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அடுத்த ஆண்டு மார்ச் வரை தடை விதித்துள்ளது, தேசியத் தலைநகரில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.80ஐத் தாண்டியது. வெங்காய மண்டிகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.60 ஆக இருந்தது. 

அதுமட்டுமல்ல, கோதுமை இருப்பு வைத்திருப்பதற்கான விதிமுறைகளையும் மத்திய அரசு கடந்த வாரம் கடுமையாக்கியது, கோதுமை பதுக்கல்களைத் தடுக்கவும், அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்ட...  வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘சூப்பர்’ பானம்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News