MSPயை விட அதிக விலையில் நெல் கொள்முதல் செய்வதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் 47வது நாளையும் கடந்து நடைபெற்றுவருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான கோரிக்கையும் இந்த விவசாய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு ஒப்பந்த நடவடிக்கை அரசியல் ரீதியிலான பரபரப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2021, 10:33 PM IST
  • ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஒப்பந்தம் செய்துள்ளது
  • எம்.எஸ்.பியை விட அதிக விலைக்கு நெல் கொள்முதல் ஒப்பந்தம்
  • விவசாயிகள் போராட்டம் தொடரும் சமயத்தில் இந்த ஒப்பந்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
MSPயை விட அதிக விலையில் நெல் கொள்முதல் செய்வதன் தாக்கம் என்னவாக இருக்கும்? title=

புதுடெல்லி: நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் 47வது நாளையும் கடந்து நடைபெற்றுவருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான கோரிக்கையும் இந்த விவசாய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு ஒப்பந்த நடவடிக்கை அரசியல் ரீதியிலான பரபரப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.  

ரிலையன்ஸ் நிறுவனம் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை (MSP)விட கூடுதல் விலைக்கு 1,000 குவிண்டால்  நெல்லை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. 

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கடும் குளிரிலும் (Cold) தொடர்கிறது. வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் என 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Also Read | MGNREGA திட்டத்தில் ₹1 லட்சம் மானியம் கிடைக்கும் தெரியுமா?

இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதல் விலைக்கு நெல்லை கொள்முதல் (Procurement) செய்ய தீர்மானித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்புடன், ரிலையன்ஸ் நிறுவனம் நெல் கொள்முதலுக்கான ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தின் ஸ்வஸ்திய விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்துடன் (SFPC) ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஒரேயொரு நிபந்தனை தான் ரிலையன்ஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. அது, நெல்லின் ஈரப்பதம் 16%க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் அது. 

ஒரு குவிண்டால் நெல், 1,950 ரூபாய் விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது. குவிண்டால் ஒன்றுக்கு 1,868 ரூபாய் என அரசு விலை நிர்ணயித்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட குவிண்டால் ஒன்றுக்கு 82 ரூபாய் கூடுதல் விலையில் நெல்லை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Also Read | "ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக Cancerஐ தடுக்கும் மாயம் என்ன?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News