Belated ITR Filing: 2022-23 நிதியாண்டு மற்றும் 2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கு ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவைத் தவறவிட்டவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி வாய்ப்பு உங்களுக்கு இன்னும் உள்ளது. டிசம்பர் 31 வரை நீங்கள் தாமத வருமான வரிக் கணக்கை (Belated ITR) தாக்கல் செய்யலாம். இருப்பினும், பிலேடட் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்ய நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
Belated ITR என்றால் என்ன?
வருமான வரி விதிகளின்படி, வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் சில காரணங்களால் யாராவது தனது வருமானத்தைத் தாக்கல் செய்யவில்லை என்றால், அவர் தாமத கட்டணத்துடன் தனது ரிட்டனைத் தாக்கல் செய்ய விருப்பம் அளிக்கப்படுகிறது. வரி செலுத்தும் ஒரு நபரால் ஒரு வருடத்தில் கடைசி தேதிக்குள் தனது வரியை செலுத்த முடியவில்லை என்றால், அவரிடம் உள்ள ஒரே வழி பிலேடட் ITR தாக்கல் செய்வதாகும். அதாவது, கடைசி தேதிக்குப் பிறகு யாராவது ஐடிஆர் தாக்கல் செய்தால், அது பிலேடட் ஐடிஆர் என்று அழைக்கப்படுகிறது.
பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்? (What is the Penalty for Belated ITR?)
ஒருவர் பிலேடட் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்தால், அதன் மிகப்பெரிய தீமை நீங்கள் தாமதமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதுதான். உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்யும் போது ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். அதேசமயம் உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும்.
பிலேடட் ஐடிஆர் -ஔ தாக்கல் செய்வது எப்படி? (How is Belated ITR filled?)
உங்கள் சாதாரண ஐடிஆர் -ஐ நிரப்புவது போல், பிலேடட் ஐடிஆர் -ரும் அதே வழியில் நிரப்பப்படுகிறது. ஆனால் இங்கே பிரிவு மாறுகிறது. சாதாரண ஐடிஆர் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(1) இன் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், பிலேடட் ஐடிஆர் பிரிவு 139(4) இன் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் செயல்முறையை இங்கே படிப்படியாக அறிந்து கொள்வோம்.
ஸ்டெப் 1- முதலில் வருமான வரியின் இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும், https://www.incometax.gov.in/iec/foportal/.
ஸ்டெப் 2- இங்கே பயனர் ஐடியில் PAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
ஸ்டெப் 3- மேலே ஒரு ஈ-ஃபைல் மெனுவை நீங்கள் பார்ப்பீர்கள். பின்னர் Income Tax Return -க்கு சென்று, File Income Tax Return என்பதை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4- அடுத்த பக்கத்தில் நீங்கள் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கீழே தாக்கல் செய்யும் முறையில், ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் 'Continue' என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | Business Idea: EV வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால்... லட்சங்களில் சம்பாதிக்கலாம்.!
ஸ்டெப் 5- இங்கே Start New Filing என்பதைக் கிளிக் செய்வீர்கள். நீங்கள் முன்பே தாக்கல் செய்து ட்ராஃப்டை சேமித்திருந்தால், மேலே உள்ள விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஸ்டெப் 6- இங்கே நீங்கள் ITR-1 ஐ தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், Status Applicable -இல் உள்ள Individual என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 7- அடுத்த பக்கத்தில் நீங்கள் ITR படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். அங்கு நீங்கள் ITR 1 ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த வகை வரி செலுத்துபவர் எந்த ITR படிவத்தை நிரப்ப வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம். ஐடிஆர் படிவம் 1 உடன் தொடரவும்.
ஸ்டெப் 8 - உங்களுக்கு எந்த ஆவணங்கள் தேவை என்பதை இங்கே பார்க்கலாம். தொடர Let’s Get Started என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 9- நீங்கள் ஏன் வருமான வரி செலுத்துகிறீர்கள் என்பதை அடுத்த பக்கத்தில் கூற வேண்டும்.
ஸ்டெப் 10: இப்போது நீங்கள் முன் நிரப்பப்பட்ட ரிட்டர்ன் விவரங்களை சரிபார்க்க வேண்டும். இதில், உங்கள் விவரங்களை தனிப்பட்ட விவரங்களில் சரிபார்க்கவும். தாக்கல் செய்யும் பிரிவில் சில மாற்றங்கள் இருந்தால், அதைத் திருத்தலாம்.
ஸ்டெப் 11- இதேபோல், உங்கள் மொத்த வருமானம், வரி விலக்கு, செலுத்திய வரி மற்றும் வரிப் பொறுப்பு ஆகியவற்றின் விவரங்களையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, நீங்கள் தொடரலாம். ஏதேனும் வரித் தொகையை இப்போது செலுத்த வேண்டியிருந்தால், அதை இப்போது அல்லது அதற்குப் பிறகு e-pay வரி சேவை மூலம் செய்யலாம்.
ஸ்டெப் 12- இப்போது உங்கள் ITR இன் முன்னோட்டத்தைப் (ப்ரெவ்யூ) பார்க்கலாம். இங்கிருந்து Proceed to Validation என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 13- இப்போது நீங்கள் ITR ஐ சரிபார்க்க வேண்டும். இதில் மூன்று விருப்பங்கள் வரும், உங்களுக்கு எளிதான மற்றும் வசதியான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மின் சரிபார்ப்புக்குப் (e-verification) பிறகு உங்கள் ஐடிஆர் சமர்ப்பிக்கப்படும். உங்கள் ஐடிஆர் ரசீதை இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ