சாலைகள் மோசமான நிலையில் இருந்தால் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது: நிதின் கட்கரி...!!

சாலைகள் சரியாக இல்லை என்றால் நெடுஞ்சாலை ஏஜென்சிகள் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 27, 2024, 05:11 PM IST
  • பல இடங்களில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
  • மோசடி நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • GNSS மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் போது கட்டண முறைகள் ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றப்படலாம்.
சாலைகள் மோசமான நிலையில் இருந்தால் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது: நிதின் கட்கரி...!! title=

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை FASTag தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை நன்றாக பராமரிக்கவே இந்த சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்றாலும், பல இடங்களில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

சாலைகள் நல்ல நிலையில் இல்லாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், சாலைகள் நன்றாக இருந்தால் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் நல்ல நிலையில் இல்லை என்றால், சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு  விரைவில் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பயிற்சிப் பட்டறை நடந்த நிலையில், அதில் நிதின் கட்கரி கலந்து கொண்ட போது தான் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது நடௌமுறயில் உள்ள FASTag அமைப்பிற்குப் பதிலாக GNSS அடிப்படையிலான எலக்ட்ரானிக் டோல் கட்டண வசூல் (ETC) முறையைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது சாட்டிலைட் அடிப்படையில் இயங்கும் சுங்கக் கட்டண வசூலிக்கும் முறையாகும். முதற்கட்டமாக வணிக ரீதியிலான வாகனங்களில் இந்த முறையை அமல்படுத்திய பிறகு, தனியார் வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களிலும் இந்த முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | திடீர் பணத்தேவையா? ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள்!

மேலும், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Global Navigation Satellite System - GNSS) அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமல்படுத்தப்பட்டால், நாட்டின் மொத்த சுங்க வசூல் குறைந்தது ரூ.10,000 கோடி அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறினார். 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் மொத்த சுங்கச் சேகரிப்பு ஆண்டுக்கு ஆண்டு 35 சதவீதம் அதிகரித்து, ரூ.64,809.86 கோடியை எட்டியுள்ளது. 

மோசடி நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜிஎன்எஸ்எஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் போது கட்டண முறைகள் ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற்றப்படலாம். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயணத் திட்டங்களின் அடிப்படையில் இதற்கான கிரெடிட்களை விரிவாக வழங்க முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News