உடலுறவுக்கு வயது பிரச்சனையாக உள்ளதா? இங்கு அதற்கான 5 டிப்ஸ்!
உடலுறவு நபது வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகும். அப்படி இருக்கையில் சிலருக்கு அவர்களது வயது பிரச்சனையாக உள்ளது. அந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதை இத்தொகுப்பில் கொடுத்துள்ளோம்.
தினமும் மெடிடேஷன் (தியானம்) செய்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியும். அதேபோல் காம உணர்வை மேம்படுத்துகிறது.
உடற்பயிற்சி அவசியம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் வாஸ்குலர் பிரச்சனைகளை ஏற்படுத்தி விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. வாஸ்குலர் பிரச்சனை என்பது இரத்த நாளங்கள், நரம்புகள் போன்ற அமைப்புகளை பாதிக்கும் பிரச்சனையை குறிக்கிறது. எனவே தினமும் உடற்பயிற்சி அவசியமாகிறது.
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு உங்கள் செக்ஸ் வாழ்க்கை சலுப்பூட்டுவதாக மாறலாம். எனவே புதிய மற்றும் வித்தியாசமான செக்ஸ் பொசிஷன்களை முயற்சி செய்வதன் மூலம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.
வயதாகும் பட்சத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்படலாம் அதனை சரி செய்வதற்கு நாம் மருத்துக்களை உட்கொள்கிறோம். அப்படி சில மருத்துக்கள் உங்கள் காவ உணர்ச்சியை குறைக்கும்.
பச்சை காய்கறிகள், பழங்கள், நட்ஸ், கடல் உணவுகள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.