EPFO Update: இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நிறுவனங்கள் தங்கள் புதிய ஊழியர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட UAN-ஐ செயல்படுத்த நவம்பர் 30-ஆம் தேதியை கடைசித் தேதியாக நிர்ணயித்துள்ளது. UAN ஐ செயல்படுத்துவது மிகவும் முக்கியம். UAN செயல்படுத்தப்படவில்லை என்றால், அதாவது ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையின் (ELI திட்டம்) பலன்களைப் பெற முடியாது. இதன் மூலம் நீங்கள் PF, ஓய்வூதியம், காப்பீடு மற்றும் மிக முக்கியமாக, வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) போன்ற EPFO வசதிகளின் பலன்களைப் பெற முடியும். இதற்கு உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.
UAN ஐ செயல்படுத்துவதும் பணியை இன்னும் முடிக்காதவர்கள் இன்றே அதை செய்து விட வேண்டும். இல்லையெனில் இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பட்ஜெட்டில் மூன்று ELI திட்டங்களை (A, B மற்றும் C) தொடங்கினார். இந்த நன்மைகள் நேரடியாக வங்கிக் கணக்கில் (டிபிடி) செல்லும்.
ELI திட்டம்
ELI திட்டத்தில் பங்கேற்க தகுதியுடைய அனைத்து ஊழியர்களும் தங்களின் யூனிவர்சல் கணக்கு எண்ணைப் பெற வேண்டும் என்றும் அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் 2024-2025 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்தபடியே UAN ஐ ஆன்லைனில் ஆக்டிவேட் செய்யலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பொது பட்ஜெட்டின் போது மூன்று ELI திட்டங்களை (A, B மற்றும் C) அறிமுகப்படுத்தினார். ELI இன் பலன் DBT மூலம் வழங்கப்படுகிறது. ஆகையால் அனைத்து நிறுவனங்களும் UAN செயல்படுத்தல் மற்றும் அனைத்து புதிய பணியாளர்களுக்கும் ஆதார் சீடிங்கை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ELI திட்டம் மூலம் அதிகபட்ச நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுமாறு EPFO-க்கு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் UAN ஆக்டிவேட் செய்வதற்கான செயல்முறையை இங்கே காணலாம்:
ஆதார் அடிப்படையிலான OTP செயல்முறையைப் பயன்படுத்தி UAN ஐ நிறைவு செய்ய முடியும்.
- முதலில் EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
- அதன் பிறகு 'Important Link' என்பதன் கீழ் உள்ள "Activate UAN" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, UAN எண், ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை அங்கே நிரப்பவும்.
- அதன் பிறகு ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்புக்கு ஒப்புதலை வழங்க வேண்டும்.
- ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற, இப்போது 'Get Authorization PIN' என்பதைக் கிளிக் செய்யவும்.
- UAN செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க, உங்கள் மொபைல் எண்ணில் வரும் OTP ஐ உள்ளிடவும்.
- வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, அதாவது ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.
ELI திட்டம்: சிறப்பம்சம் என்ன?
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ELI திட்டம் உருவாக்கப்பட்டது.
- அரசாங்கம் ELI திட்டத்தை A, B மற்றும் C என மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது.
- இத்திட்டத்தின் நோக்கம் 2 ஆண்டுகளில் 2 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
- மத்திய அரசு, வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கு (ELI) மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது.
- இந்தத் திட்டங்களின் நோக்கம், அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகும்.
- திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.
- இதன் முக்கிய நோக்கம் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும் புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிப்பது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ