உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது. சீனாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது அதல பாதாளத்தில் இருக்கிறது. நிலைமையை சீர்படுத்தும் முயற்சியில் சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடமான விகிதக் குறைப்பு (loan prime rate (LPR)) தொடர்பான முக்கிய சீர்திருத்தத்தை செய்துள்ளது.
சொத்து சந்தையை மீட்பதற்காக, சீனாவில் ஐந்தாண்டு கடன்களுக்கு 25அடிப்படை புள்ளிகள் அளவிற்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அரசு இதுவரை இல்லாத அளவு தீவிரமாக நிலையை சீர் செய்ய தலையிட்டிருப்பதைக் குறிக்கிறது. ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒரு தீர்க்கமான நகர்வு இது என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
தள்ளாடிக் கொண்டிருக்கும் சொத்துச் சந்தை புத்துயிர் பெற்றால் தான், சீனாவின் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும் என்று முடிவு செய்த சீன அரசு, பெஞ்ச்மார்க் அடமான விகிதத்தில் கணிசமான குறைப்பைச் செயல்படுத்தியுள்ளது.
இது, சீனாவின் வரலாற்றில் மிகப்பெரிய வட்டி விகிதக் குறைப்பு சுழற்சி என்றும், இது இனிமேலும் தொடரலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். செலவுகளைக் குறைப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இது.
ஐந்தாண்டு எல்பிஆர் மாற்றப்பட்டு, வட்டி 4.20 சதவீதத்தில் இருந்து 3.95 சதவீதமாக குறைக்கப்பட்டது என்பது, சொத்து சந்தையில் உள்ள தேக்கத்தை நிவர்த்தி செய்யும் சீனாவின் முயற்சிகளின் தீவிரத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது. ஐந்தாண்டுகளுக்கான எல்பிஆர் மாற்றப்பட்டாலும், ஓராண்டுக்கான எல்பிஆர் 3.45 சதவீதமாக மாறாமல் உள்ளது, சீனாவில் பெரும்பாலான புதிய மற்றும் நிலுவையில் உள்ள கடன்கள் இந்த விகிதத்தின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான விகிதக் குறைப்பு என்பது, பெய்ஜிங்கின் அணுகுமுறையில் மாற்றத்தைக் குறிக்கிறது, இது நாணயம் அல்லது வங்கி அமைப்பில் குறைந்த கடன் விகிதங்களின் பாதகமான விளைவுகளைப் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யலாம்.
சீன நாணயமான யுவானின் ஸ்திரத்தன்மை ஒருபுறம் என்றால், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும், சொத்துத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் சீன அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
2023 ஆம் ஆண்டில், சீனாவில் புதிய வீடுகளுக்கான விலைகள் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்த நிலையில், சொத்துச் சந்தையை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் அவசியமானதாகிறது. ஏனென்றால், சொத்து சந்தை மட்டுமல்ல, சீனாவின் பங்குச் சந்தையும் தடாலடியாக சரிந்தது, அந்நாட்டு பொருளாதாரம் தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.
வீழ்ந்துகிடக்கும் சொத்துத் துறையில் பணப்புழக்கத்தை புகுத்தற்காக அரசு மேற்கொண்ட முயற்சிகளில், சமீபத்திய வைப்பு விகிதக் குறைப்புக்கள் மற்றும் வங்கி கையிருப்புகளின் குறைப்பு ஆகியவை வணிக வங்கிகளுக்கு கடன் வாங்கும் செலவைக் குறைக்கும்.
அடமான விகித மறு-விலை நிர்ணயம் பொதுவாக ஆண்டு அடிப்படையில் நிகழும் என்பதால், உடனடியாக மக்களுக்கு பலன் கிடைக்காது என்றாலும் நீண்ட கால அடிப்படையில் நிலைமை மாறும்.
மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. FDல் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கி, டபுள் வருமானம் நிச்சயம்
சீனாவின் பொருளாதாரம் கடந்த 2023இல் 5.2% வளர்ச்சியடைந்தது. சீன அரசின் பெருகிவரும் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் சீன பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை குறைந்த நிலையில், ரியல் எஸ்டேட் விற்பனையை ஊக்குவிக்க தொழிலதிபர்கள் மேற்கொள்ளும் யுக்திகளும் அதிர்ச்சியளிக்கின்றன.
‘வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாகப் பெறுங்கள்’
மக்களை கவர்வதற்காக விளம்பரம் செய்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாகப் பெறுங்கள் என ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. அதிகமாக பேசப்படும் விளம்பரமாக மாறி, தங்கள் நிறுவனத்தின் விற்பனை அமோகமாகும் என்று கணக்குப்போட்டு காய் நகர்த்திய நிறுவனத்திற்கு காத்திருந்தது அபராதம் தான்.
விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், இந்த சர்ச்சையைப் பார்த்து, சீன ரியல் எஸ்டேட் கண்காணிப்பு அமைப்பு விசாரணை மேற்கொண்டு 3 லட்சம் அபராதம் விதித்து, விளம்பரம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுபோன்ற பல காரணிகளின் பின்னணியில் பார்க்கும்போது, சீன அரசு மேற்கொண்டுள்ள அடமான விகிதக் குறைப்பு (loan prime rate (LPR)) நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தலாம்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ