வங்கி கடன் கொடுக்க மறுக்கிறதா? இதோ உங்களுக்கான Tips

பல காரணங்களால் வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை ரத்து செய்யலாம். கடனைப் பெறுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு கவனமாக கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2021, 06:34 PM IST
  • பெரும்பாலும் சிறிய தவறுகளால் தான், கடன் விண்ணப்பம் ரத்து செய்யப்படுகிறது.
  • கிரெடிட் ரேட்டிங் மதிப்பெண் 300-900 என்ற அளவில் மதிப்பிடப்படுகிறது.
  • உங்கள் வருமானம், கடனை திரும்ப செலுத்த போதுமானதாக இல்லை என வங்கி நினைத்தால், உங்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம்.
வங்கி கடன் கொடுக்க மறுக்கிறதா? இதோ உங்களுக்கான Tips  title=

கடனைப் பெறுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு கவனமாக கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும். பெரும்பாலும் சிறிய தவறுகளால் தான், கடன் விண்ணப்பம் ரத்து செய்யப்படுகிறது.

பல காரணங்களால் வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை ரத்து செய்யலாம். கடனைப் பெறுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு கவனமாக கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும். முதலாவதாக, சில விண்ணப்பதாரர்கள் ஏன் வங்கிக் கடன்களை வழங்க மறுக்கிறார்கள் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் சிறிய தவறுகளால் தான், கடன் விண்ணப்பம் ரத்து செய்யப்படுகிறது.

கிரெடிட் ரேட்டிங்

மோசமான கிரெடிட் ரேடிங் காரணமாக  உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். உங்கள் வருமானம் போதாது என்று வங்கி நினைப்பதால், விண்ணப்பம் ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பதாரருக்கு கடனை திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை வங்கிகள் அறிய விரும்புகின்றன. விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் வங்கிக் கணக்கு குறித்து வங்கி முழுமையான தகவலை பெற விரும்புவதற்கு இதுவே காரணம்.

ALSO READ | 7th Pay Commission: ஜூலை 1 முதல் அரசு ஊழியர்களுக்கு முழுமையான DA, DR சலுகைகள்

உங்கள் வருமானம், கடனை திரும்ப செலுத்த போதுமானதாக இல்லை என வங்கி நினைத்தால்,  உங்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள் - கிரெடிட் ரேட்டிங் மதிப்பெண் 300-900  என்ற அளவில் மதிப்பிடப்படுகிறது.  750 அல்லது அதற்கு மேல் .
மதிப்பெண் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு கடன் பெறுவதில் சிரமம் இல்லை.

அதே போன்று,  நிறுவனங்களும் தரவரிசை செய்யப்படுகின்ற்ன. நிறுவனங்களின் கிரெடிட் ரெபோர்ட் (CCR) என்றும் அழைக்கப்படுகிறது. இது 1 முதல் 10 வரையிலான அளவிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. எண் 1 ஆக இருக்கும் நிறுவனம் சிறந்த நிறுவனம் என கருதப்படுகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன

கடன் மதிப்பீட்டில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதை சரிபார்த்து கடன் மதிப்பீட்டு நிறுவனத்திடம் தகவலை சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் கடன் பெற விண்ணப்பிப்பது எப்போதுமே சிறந்தது. உங்கள் வங்கி கடன் கொடுக்க மறுத்தால், வேறு வங்கிக்குச் செல்லலாம்.

கிராமீய வங்கிகள் மற்றும் பிராந்திய கூட்டுறவு வங்கிகள் அதிக நிபந்தனை ஏதும் இல்லாமல் கடன் வழங்குவார்கள்

பழைய கடன் அதிகம் இருந்தால், புதிய கடனைப் பெறுவது கடினம். ​​உங்கள் பழைய கடன் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை இதில் கணக்கிடப்படும்.

ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி, ”Work From Home" முறைக்கு மாறியது உச்ச நீதிமன்றம் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News