புதுடெல்லி: “வாகனத்தின் வணிகரீதியான அறிமுகத்திற்குப் பிறகு 6 மாதங்களுக்குள் இந்த மைல்கல் சாதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தால் இயங்கும் கார்களின் மீதான விருப்பம் மற்றும் தேவை இரண்டிலும் விரைவான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை இது காட்டுகிறது.
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் எலக்ட்ரிக் கார் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட Nexon EV Electric SUV மின்சார வாகனங்களில் சிறந்த விற்பனையாளராக உள்ளது. இது டாடா மோட்டார்ஸ் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 62% சந்தை பங்களிப்பு என்ற அளவில் உயர்வதற்கு உதவியாக இருக்கிறது, ”என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
Nexon EV Electric SUV காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும், 312 கி.மீ வரை செல்ல முடியும். அதோடு, zero emission உமிழ்வு மற்றும் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் இந்த கார், சுகமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் Nexon EV Electric SUV அணுகல் மற்றும் பயன்பாட்டை பிரபலப்படுத்த, நிறுவனம் சமீபத்தில் novel EV Subscription model ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உகந்தது.
டாடா மோட்டார்ஸ் ஒரு முழுமையான e-mobility ecosystem “Tata uniEVerse”ஐ அறிமுகப்படுத்தியது, இது மற்ற டாடா குழும நிறுவனங்களின் பலத்தையும் அனுபவத்தையும் இணைத்து Tata uniEVerse உருவாக்கியுள்ளது. நுகர்வோருக்கு சார்ஜிங் தீர்வுகள், புதுமையான அனுபவங்கள் மற்றும் சுலபமான நிதித் தெரிவுகள் கிடைக்கின்றன.
"மின்சார வாகனங்களை வாங்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதையும் காண முடிகிறது. கோவிட் -19 இன் சவால்கள் இருந்தபோதிலும், குறுகிய காலத்தில் 1000 வது நெக்ஸன் ஈ.வி.யின் வெளியீடு, ஈ.வி.களின் மீதான மக்களின் அதிகரித்துவரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. டாடா மோட்டார்ஸ் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் விரிவான நிலையான தீர்வுகளை தொடர்ந்து கண்டுபிடித்து உருவாக்கும். ஈ.வி.க்கள் எதிர்காலம் மற்றும் தொழில்துறைத் தலைவராக டாடா மோட்டர்ஸ் இருப்பதால், வாடிக்கையாளர்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ”என்று டாடா மோட்டார்ஸ் லிமிடெட் பயணிகள் வாகன வணிகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
Read Also | ஆகஸ்ட் 18 முதல் அமேசானில் தள்ளுபடி விலையில் Samsung Galaxy M01 கிடைக்கும்!