Senior Citizens Savings Scheme: அனைத்து வயதினருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. இந்த தேவை வயதிற்கு ஏற்ப மாறுபடும். ஒரு குறிப்பிட்ட வயதானவுடன் நாம் பணத்தை ஈட்டுவது மிகவும் கடினமான ஒரு பணியாகிவிடும். ஆகையால் இளமையிலேயே பணி ஓய்விற்கு பிறகான காலத்திற்காக சேமித்து வைப்பது நல்லது. நம் நாட்டில் மூத்த குடிமக்களுக்கான பல பிரத்யேக சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு முக்கியமான, பாதுகாப்பான திட்டத்தை பற்றி இங்கே காணலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது பெரும்பாலும் முதியவர்களின் நிதி பாதுகாப்பிற்கும் முதுமையின் பதற்றத்தை நீக்கவும் உகந்த ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இதனுடன், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் முதலீட்டிற்கு வரிவிலக்கு கிடைக்கும். இதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலம.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) முக்கியமாக இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான திட்டமாகும். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் வரிச் சேமிப்புப் பலன்களுடன் வருமானத்தையும் வழங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாக கருதப்படுகின்றது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): இந்த திட்டத்தின் விவரங்கள் என்ன?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியப் பயன் திட்டமாகும். இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் வழக்கமான வருமானத்தைப் பெற முடியும். இது ஒரு தபால் அலுவலக சேமிப்பு திட்டம் (Post Office Saving Scheme) என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற பலன்களைப் பெற, மூத்த குடிமக்கள் SCSS கணக்கைத் திறக்கலாம். ஒரு தபால் அலுவலக கிளை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக்கு சென்று இந்த கணக்கை திறக்க முடியும்.
SCSS:இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
- SCSS என்பது அரசாங்க ஆதரவு திட்டமாகும். ஆகையால், முதலீடு செய்யப்பட்ட தொகை பாதுகாப்பாக இருப்பதோடு முதிர்வு காலத்தில் உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும்.
- SCSS கணக்கைத் திறக்கும் நபர்களுக்கு அசல் வைப்புத் தொகைக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வட்டி கிடைக்கும். அவர்கள் வைப்புத்தொகைக்கு காலாண்டு வட்டி கிடைக்கும். ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களின் 1ம் தேதிகளில் உறுப்பினர்களின் கணக்கில் வட்டி செலுத்தப்படும்.
- ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் பணத்தை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகை ரூ.1 லட்சத்தை தாண்டும்போது, காசோலை மூலம் பணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | PPF: தினமும் வெறும் ரூ.405 சேமித்து எளிதில் கோடீஸ்வரராவது எப்படி?
- SCSS இன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 5 ஆண்டுகளுக்கு பிறகு, இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து, உறுப்பினர்கள் முதிர்வு காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். முதிர்வு காலத்தை நீட்டிப்பதற்கான விண்ணப்பம் முந்தைய ஆண்டிலேயே கொடுக்கப்பட வேண்டும்.
- இந்த திட்டதின் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.1,000 ஆகும். அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.30 லட்சமாக உள்ளது. இதில் 1,000 மடங்குகளில் டெபாசிட் செய்யலாம்.
SCSS: இந்த திட்டத்தில் சேர்வதற்கான தகுதி என்ன?
- இந்த திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் சேரலாம்.
- 55 - 60 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் இதில் சேரலாம். இருப்பினும், ஓய்வூதிய பலன்களைப் பெற்ற 1 மாதத்திற்குள் முதலீடு செய்யப்பட வேண்டும்.
- 50 வயதுக்கு மேல் மற்றும் 60 வயதுக்கு கீழ் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் சேரலாம். இருப்பினும், ஓய்வூதிய பலன்களைப் பெற்ற 1 மாதத்திற்குள் முதலீடு செய்யப்பட வேண்டும்.
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) SCSS ஐத் திறக்க தகுதியற்றவர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ