வாடிக்கையாளர்களுக்கு SBI அளித்த பரிசு: இனி Whatsapp மூலமே இவற்றை செய்யலாம்

SBI WhatsApp Banking: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2022, 03:27 PM IST
  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி வங்கி தொடர்பான சில சேவைகளை வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே ஆன்லைனில் வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும்.
  • வாட்ஸ்அப் பேங்கிங் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி இருப்பை எளிதாக சரிபார்க்கலாம்.
வாடிக்கையாளர்களுக்கு SBI அளித்த பரிசு: இனி Whatsapp மூலமே இவற்றை செய்யலாம் title=

எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி வங்கி தொடர்பான சில சேவைகளை வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே ஆன்லைனில் வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் பேங்கிங் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி இருப்பை எளிதாக சரிபார்க்கலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதனுடன், அவர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் மினி அறிக்கையையும் பெறலாம். இதற்காக வங்கியின் புதிய சேவை எண்ணான +919022690226ஐ மொபைலில் சேவ் செய்து வைக்க வைக்க வேண்டும்.

இது குறித்து ட்வீட் செய்த எஸ்பிஐ, "உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பில் உள்ளது. இனி எளிதாக உங்கள் கணக்கு இருப்பை அறிந்துகொள்ளலாம். பயணத்தின்போதும் மினி ஸ்டேட்மென்ட்டைப் பார்க்கலாம்." என்று கூறியுள்ளது.

எப்படி பதிவு செய்வது

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்த, வங்கியின் சேவை எண்ணான +919022690226 ஐ உங்கள் மொபைலில் சேவ் செய்து வைக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208933148 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதில் WAREG என டைப் செய்து உங்கள் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும். அது WAREG <space> Account Number என்ற வடிவத்தில் இருக்க வேண்டும். 

SBI WhatsApp Banking

மேலும் படிக்க | SBI Loan: MCLR விகிதங்களை உயர்த்திய எஸ்பிஐ... உயரும் EMI

இப்படி சேட் செய்து பலன் பெறலாம் 

எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கியில் உங்கள் கணக்கை பதிவு செய்தவுடன், நீங்கள் எளிதாக வங்கியுடன் சேட் செய்யலாம். ‘Hi’ என டைப் செய்து எஸ்பிஐக்கு அனுப்பினால் போதும். அதன் பிறகு நீங்கள் வங்கியிலிருந்து இந்த செய்தியைப் பெறுவீர்கள்:

Dear Customer,
Welcome to SBI WhatsApp Banking Services!
Please Choose from any of the option below.
1. Account Balance
2. Mini Statement
3. De-register from WhatsApp Banking
You may also type your query to get started.

இதன் தமிழாக்கம்:

அன்பார்ந்த வாடிக்கையாளரே,
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்!
கீழே உள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கணக்கு இருப்பு
2. மினி அறிக்கை
3. வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம்
தொடங்குவதற்கு உங்கள் வினவலையும் தட்டச்சு செய்யலாம்.

மேலும் படிக்க | தபால் நிலையம் vs வங்கி: சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி தருவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News