Savings Account vs Current Account: உங்களுக்கு ஏற்ற கணக்கு எது?

Savings Account vs Current Account:  இரண்டும் டெபாசிட் அல்லது பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2023, 06:32 PM IST
  • சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைப்பது அவசியம்.
  • குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காமல் போனால், அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
  • ஆனால் நடப்புக் கணக்கில் இப்படி நடக்காது.
Savings Account vs Current Account: உங்களுக்கு ஏற்ற கணக்கு எது? title=

இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கணக்கு மிக முக்கியமானதாகிவிட்டது. ஓய்வூதியம் முதல் உதவித்தொகை மற்றும் வங்கி கணக்கு கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் சேமிப்பு மற்றும் நடப்பு என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. வங்கிக் கணக்கைத் திறக்கும்போது எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மக்கள் அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இரண்டும் டெபாசிட் அல்லது பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சேமிப்பு கணக்கு என்றால் என்ன?

சேமிப்புக் கணக்கு சேவிங்க்ஸ் அகவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கணக்கு சாமானியர்களுக்கானது, குறிப்பாக பொது மக்களுக்கு இது சேமிப்பிற்கு ஒரு நல்ல வழியாக கருதப்படுகின்றது. இந்தக் கணக்கில் சிறிது சிறிதாக பணத்தைச் சேமிக்கலாம். டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டியும் கிடைக்கும். இந்த கணக்கில் 4 முதல் 6 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். சேமிப்புக் கணக்கில் எந்தக் கட்டணமும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம்.

நடப்புக் கணக்கு (கரண்ட் அகவுண்ட்) என்றால் என்ன?

கரண்ட் அகவுண்ட் எளிமையான மொழியில் நடப்புக் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது குறிப்பாக வணிக வர்க்கத்தினருக்கு ஏற்றதாக கருதபப்டுகின்றது. இதில் அதிக அளவில் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த நடப்புக் கணக்கு மிகப்பெரிய பரிவர்த்தனைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். நடப்புக் கணக்கில் எந்த வட்டியும் கிடைக்காது.

இரண்டு கணக்குகளுக்கும் என்ன வித்தியாசம்?

குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance)

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைப்பது அவசியம். குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காமல் போனால், அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் நடப்புக் கணக்கில் இப்படி நடக்காது. இதில், இருக்கும் பண இருப்பை விட அதிகமாக பணம் எடுக்கும் வசதி கிடைக்கும். இது ஓவர் டிராஃப்ட் வசதி எனப்படும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: சம்பளம் உயரும், ஊதிய விதிகளில் மாற்றம்.. உத்தரவை வெளியிட்டது CBDT

பரிவர்த்தனை வரம்பு (Transaction Limit)

சேமிப்புக் கணக்கில் இருந்து ஒரு மாதத்தில் செய்யக்கூடிய பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் வரம்பு உள்ளது, ஆனால் நடப்பு கணக்கில் அத்தகைய வரம்பு இல்லை. இது தவிர, சேமிப்புக் கணக்கில் அதிகபட்ச தொகையை வைத்திருக்க ஒரு வரம்பு உள்ளது. அதே நேரத்தில் நடப்புக் கணக்கில் அத்தகைய வரம்பு இல்லை.

வரி இல்லை

சேமிப்புக் கணக்கில் வைப்புத்தொகைக்கு வட்டி பெறப்படுகிறது. எனவே இது வரி நிகரத்தின் கீழ் வருகிறது. இருப்பினும், நடப்புக் கணக்கில் உள்ள வைப்புத்தொகைக்கு வட்டி கிடைக்காது, இதன் காரணமாக அது வரிக்கு அப்பாற்பட்டது.

சம்பளம் பெறும் ஊழியர்கள், அல்லது பணம் சேமிப்பவர்கள் வங்கியில் சேமிப்பை டெபாசிட் செய்வதற்காக சேமிப்பு வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது. அதேசமயம் நடப்பு வங்கி கணக்கு வணிகம் செய்பவர்களுக்கானது. இதை ஸ்டார்ட்அப், பார்ட்னர்ஷிப் நிறுவனம், பிரைவேட் லிமிடெட் கம்பெனி, பப்ளிக் லிமிடெட் கம்பெனி போன்றவற்றாலும் திறக்க முடியும்.

கூடுதல் தகவல்: 

சில நாட்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank), வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்றை அளித்தது. கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியது. கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை மத்திய வங்கி தடை செய்தது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். வணிகம், என்பிஎஃப் சி (NBFC), கூட்டுறவு வங்கி, வீட்டு நிதி நிறுவனம், நபார்டு, SIDBI போன்ற அனைத்து வங்கிகளுக்கும் புதிய விதிகள் பொருந்தும்.

மேலும் படிக்க | ரொம்ப கம்மி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கணுமா? உடனே இதை படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News