அரசாங்க காப்பீட்டு திட்டம்: ரூ.20 பிரீமியம், ரூ.2 லட்சம் காப்பீடு... விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ

Central Government Schemes: PMJJBY, PMSBY ஆகியவற்றுக்கான பிரீமியத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இரண்டு திட்டங்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரீமியம் உயர்வு அவசியமாக கருதப்பட்டதாக அரசாங்கம் கூறியது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2024, 02:51 PM IST
  • PMSBY மற்றும் PMJJBY என்றால் என்ன?
  • பிரீமியம் மற்றும் க்ளெய்ம் விவரங்கள் என்ன?
  • பிரீமியம் எவ்வளவு அதிகரித்துள்ளது?
அரசாங்க காப்பீட்டு திட்டம்: ரூ.20 பிரீமியம், ரூ.2 லட்சம் காப்பீடு... விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ title=

Central Government Schemes: முதன்மையான காப்பீட்டுத் திட்டங்களான PMJJBY எனப்படும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) மற்றும் PMSBY என்றும் அறியப்படும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) ஆகியவற்றுக்கான பிரீமியத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இரண்டு திட்டங்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரீமியம் உயர்வு அவசியமாக கருதப்பட்டதாக அரசாங்கம் கூறியது.

பிரீமியம் எவ்வளவு அதிகரித்துள்ளது?

PMJJBY -க்கான பிரீமியம் ஒரு நாளைக்கு ரூ.1.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆண்டு பிரீமியம் ரூ.330 ஆக இருந்தது. ஆனால் ஜனவரி 1, 2025 முதல் இது ரூ.436 ஆக அதிகரிக்கும். அதேபோல், PMSBY -க்கான ஆண்டு பிரீமியம் ரூ.12 ஆக இருந்தது. தற்போது இது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்களுக்கும் புதிய பிரீமியம் விகிதங்கள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும்.

இரண்டு திட்டங்களின் அதிகரித்த பிரீமியங்களை சதவீத அடிப்படையில் பார்த்தால், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவுக்கான (PMJJBY) பிரீமியம் 32% ஆகவும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் (PMSBY) பிரீமியம் 67% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்களின் க்ளெய்ம் விகிதங்களை ஈடு செய்யும் வகையில் பிரீமியங்களை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் குறிப்பிடத்தக்க நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், க்ளெய்ம்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதாலும், இரண்டு திட்டங்களும் சீராகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக பிரீமியம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

PMSBY, PMJJBY: ப்ரீமியம் மற்றும் க்ளெய்ம் விவரங்கள்

- மார்ச் 31, 2022 நிலவரப்படி, PMJJBY இன் கீழ் 6.4 கோடி செயலில் உள்ள வாடிக்கையாளர்கள் இருந்தனர். 
- PMSBY இல் 22 கோடி ஆக்டிவ் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 
- தொடங்கப்பட்டதில் இருந்து, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மொத்தம் ரூ.1,134 கோடி பிரீமியத்தைப் பெற்றுள்ளது. 
- ஒப்பீட்டளவில், மார்ச் 31, 2022க்குள், PMSBY திட்டத்தின் கீழ் ரூ.2,513 கோடி க்ளைம்களில் செலுத்தப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திற்காக, ரூ.9,737 கோடி பிரீமியமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 
- மார்ச் 31, 2022 நிலவரப்படி ரூ.14,144 கோடி க்ளைம்களில் செலுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு திட்டங்களிலும், DBT, அதாவது நேரடி பண பரிமாற்ற முறை (Direct Benefit Transfer) மூலம் நேரடியாக பயனாளியின் கணக்கில் க்ளைம் பணம் செலுத்தப்படுகின்றது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: உயர்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்? சனிக்கிழமை முக்கிய கூட்டம்

PMSBY மற்றும் PMJJBY என்றால் என்ன?

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜீவன் சுரக்ஷா பீமா யோஜனா பலன்களை வழங்க மத்திய அரசு இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டம் பொதுவான குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டம் 18 முதல் 50 வயதுடைய தனிநபர்களுக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. கூடுதலாக, விபத்துக் காப்பீட்டுத் திட்டம் 18 முதல் 70 வயதுடைய தனிநபர்களுக்கு ரூ.2 லட்சம் கவரேஜை வழங்குகிறது. இரண்டு திட்டங்களுக்கான பிரீமியங்களும் நுகர்வோரின் வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும். மேலும் க்ளெய்ம் தொகை பயனாளியின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

PMSBY மற்றும் PMJJBY க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:

How to apply for PMSBY? PMSBY -க்கு விண்ணாப்பிக்கும் முறை:

- முதலில் வங்கியின் ஆன்லைன் போர்டல் அல்லது செயலி மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் லாக் இன் செய்யவும்.
- “Insurance” என்பதன் கீழ், PMSBY திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனிப்பட்ட மற்றும் நாமினி விவரங்களை உள்ளிட்டு படிவத்தை நிரப்பவும்.
- வருடாந்திர பிரீமியம் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
- உறுதிப்படுத்தல் செய்தி மற்றும் கொள்கை விவரங்களைப் பெறுவிர்கள்.

How to apply for PMJJBY? PMJJBY -க்கு விண்ணாப்பிக்கும் முறை:

- முதலில் வங்கியின் ஆன்லைன் போர்டல் அல்லது செயலி மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் லாக் இன் செய்யவும்.
- PMJJBY விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
- தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நாமினி தகவலை வழங்கி படிவத்தை நிரப்பவும்.
- உங்கள் கணக்கிலிருந்து பிரீமியம் தானாகவே கழிக்கப்படும்.
- உறுதிப்படுத்தல் செய்தி மற்றும் கொள்கை விவரங்களைப் பெறுவிர்கள்.

மேலும் படிக்க | EPFO: UAN இணைப்பதற்கான கடைசி தேதியை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து அதிரடி உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News