PPF கணக்கின் மெச்யூரிட்டிக்கு பிறகும் கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியுமா?

PPF Account: நீங்கள் உங்கள் PPF கணக்கை நீட்டிக்க விரும்பினால், அது தொடர்பான விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2023, 09:09 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்.
  • PPF கணக்கை மெச்யூரிட்டிக்கு பிறகும் நீட்டிக்க முடியுமா?
  • வேலையை விட்டு வெளியேறிய பிறகு எவ்வளவு காலம் இபிஎஃப் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்?
PPF கணக்கின் மெச்யூரிட்டிக்கு பிறகும் கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியுமா?  title=

பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்: பணியாளர்களின் நன்மைக்காக அரசாங்கம் பல நல்ல சேமிப்பு திட்டங்களையும், பிற திட்டங்களையும் நடத்துகின்றது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அப்படி ஒரு திட்டமாகும். அரசாங்கத்தால் நடத்தப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் நீண்ட காலத்தில் ஒரு பெரிய நிதியைப் பெறலாம். 

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலை செய்யாவிட்டாலும், முதலீட்டாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலனைப் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு கூட்டு வட்டியின் (காம்பவுண்டிங் இண்ட்ரஸ்ட்) பலனை அரசாங்கம் வழங்குகிறது. அதே சமயம் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

பிபிஎஃப் திட்டம் (PPF Scheme) தொடர்பாக மக்கள் மனதில் பல வகையான கேள்விகள் உள்ளன. திட்டத்தில் முதிர்வு காலத்தை அதிகரிப்பது அவற்றில் ஒன்று. நீங்களும் PPF கணக்கை நீட்டிக்க விரும்பினால், அது தொடர்பான விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

PPF கணக்கை மெச்யூரிட்டிக்கு பிறகும் நீட்டிக்க முடியுமா?

PPF விதிகளின்படி, ஒருவர் 20 வயதில் PPF கணக்கைத் திறந்தால், அவருடைய கணக்கின் முதிர்வு 35 வயதில் இருக்கும். ஆனால் முதிர்ச்சியடைந்த பிறகும் இந்தக் கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்பினால், அவர் அவ்வாறு செய்யலாம். . விதிகளின்படி, நீங்கள் இந்த கணக்கை 5 ஆண்டுகளாக நீட்டிக்கலாம். நீங்கள் PPF கணக்கை நீட்டிக்க விரும்பினால், உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | PPF திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா... அப்போது இந்த வேலையையும் மறக்காதீங்க!

முதலீட்டின் மூலம் கணக்கை வளர்த்துக் கொள்வது

PPF கணக்கு வைத்திருப்பவர் முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கைத் தொடர இரண்டு வழிகள் உள்ளன. ஒரு விருப்பத்தில் புதிய முதலீட்டுத் தொகையுடன் கணக்கை நீட்டிக்கலாம். இதற்கு, நீங்கள் விண்ணப்பத்துடன் H படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவம் இல்லாமல் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தால், கூடுதல் டெபாசிட் தொகைக்கு எந்த வட்டியின் பலனும் கிடைக்காது. இதனுடன், வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் நீங்கள் விலக்கு பலனைப் பெற மாட்டீர்கள்.

முதலீடு இல்லாமல் டாப் அப் கணக்கு

அதே நேரத்தில், முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கைத் தொடர மற்றொரு விருப்பம் உள்ளது. இதில், கணக்கை 5 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் இதில் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்ய வேண்டியதில்லை. இதனுடன், கணக்கு வைத்திருப்பவர் ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியைப் பெறுவார். நீங்கள் முதலீடு இல்லாமல் கணக்கை நீட்டிக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்தால், அதன் பிறகு நீங்கள் முதலீடு செய்த எந்தத் தொகைக்கும் வட்டி விகிதத்தின் பலனைப் பெற முடியாது.

வேலையை விட்டு வெளியேறிய பிறகு எவ்வளவு காலம் இபிஎஃப்  கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்?

ஒரு நபர் தனது சம்பளத்திலிருந்து மாதாந்திர பங்களிப்பைத் தொடர்ந்து அளிக்கும் போது EPF கணக்கு செயலில் இருக்கும். இருப்பினும், நீங்கள் வேலையை விட்டுவிட்டாலோ அல்லது ஓய்வு பெற்றிருந்தாலோ, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இபிஎஃப் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும் என்பது முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு இடத்தில் வேலையில் சேரவில்லை என்றால், அந்த நபர் தனது இபிஎஃப் இருப்புத்தொகையில் 100% -ஐ எடுக்க, அதாவது வித்டிரா செய்ய இபிஎஃப் திட்டம் அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லது ஓய்வுபெறும் போது EPF கணக்கை மூடலாம்.

மேலும் படிக்க | வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News