Post Office Schemes: ஒவ்வொருவரும் தங்களது ஓய்வு காலத்திற்கு பிறகு ஒரு வருமானம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்படி ஓய்வுக்கு பிறகு நல்ல வருமானமும், உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம். சிறந்த வருமானம் பெற வேண்டும் என நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் சிறப்பான தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தின் முதலீடு செய்யப்படும் உங்கள் பணத்திற்கு 7.1% வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (பிபிஎஃப்) மொத்த முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும், இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு உங்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். தபால் அலுவலகத்தினால் வல்லான்க்புட்ம் பிபிஎஃப் திட்டத்தின் கீழ் நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு, 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது, இதனுடன் வட்டி வருமானத்திற்கு வரி கிடையாது. இந்தத் திட்டத்தில், நீங்கள் டெபாசிட் தொகையை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ டெபாசிட் செய்யலாம்.
தபால் அலுவலகத்தின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 ரூபாய் டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் உங்களது மொத்த முதலீட்டுட ரூ.60,000 ஆக இருக்கும். மேலும் 15 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் எனில், இந்த தொகையோடு 7.1% வட்டி சேர்த்தால், முதலீட்டுத் தொகை 15 ஆண்டுகள் முதிர்வு காலத்தில் ரூ.16,27,284 ஆக உயரும். அதாவது, 15 ஆண்டு காலத்தில் வட்டி மொத்தமாக ரூ.7,27,284 ஆக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் தான் என்றாலும், நீங்கள் இதனை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ