ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோ

Life Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2024, 02:52 PM IST
  • ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் ஆயுள் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • ஆயுள் சான்றிதழுக்கான ஜீவன் பிரமான் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோ title=

Life Certificate: ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். நாளை, அதாவது நவம்பர் 30 ஆம் தேதி ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாகும். இந்த ஆவணத்தை கடைசி தேதிக்குள் சமர்ப்பிப்பது மிக அவசியம். ஓய்வூதியம் மாதா மாதம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்த பணியை செய்து முடிக்க வேண்டியது அவசியமாகும். 

Jeevan Pramaan Patra 

ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது. டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை ஆன்லைனில் அல்லது மொபைல் ஆப் மூலம் வசதியாக உருவாக்கி சமர்ப்பிக்க அனுமதி உள்ளது.  

DLC  என்பது ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பயோமெட்ரிக்-இயக்கப்பட்ட டிஜிட்டல் சேவையாகும். இதன் மூலம் ஆயுள் சான்றிதழை எளிய வழியில் சமர்ப்பிக்க முடியும். 

Digital Life Certificate

டிஜிட்டல் லைஃப் சான்றிதழை பிரச்சனை இல்லாத செயல்முறை. CSCகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூலம் இயக்கப்படும் பல்வேறு ஜீவன் பிரமான் மையங்கள் மூலமாகவோ அல்லது எந்த PC/மொபைல்/டேப்லெட்டிலும் கிளையன்ட் அப்ளிகேஷனைப் பயன்படுத்தியோ இதை பெறலாம்.

மேலும் படிக்க | EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்

ஆன்லைனில் ஆயுள் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1. ஜீவன் பிரமான் செயலியை பதிவிறக்கம் செய்ய, https://jeevanpramaan.gov.in -க்கு சென்று 'Download' என்பதை கிளிக் செய்யவும்.
2. மின்னஞ்சல் ஐடி, கேப்ட்சாவை வழங்கி  'I agree to Download' என்பதைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் மின்னஞ்சல் ஐடியில் OTP-ஐப் பெறுவீர்கள். அந்த OTP ஐ உள்ளிடவும்.
4. சரியான OTP ஐ உள்ளிட்ட பிறகு பதிவிறக்கப் பக்கம் தோன்றும். 'Download For Windows OS' என்பதைக் கிளிக் செய்யவும்.
5. உங்கள் மின்னஞ்சல்-ஐடியில் பதிவிறக்க இணைப்பைப் பெறுவீர்கள். இணைப்பை ஒரு முறை மட்டுமே கிளிக் செய்ய முடியும், அதன் பிறகு அது காலாவதியாகிவிடும். அதைக் கிளிக் செய்யவும்.
6. ஜீவன்பிரமான் அப்ளிகேஷனைக் கொண்ட .zip கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும். .zip ஃபைலை அன்சிப் செய்யவும். 
7. அன்சிப் செய்த பிறகு 'client installation document' -இல் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ஆயுள் சான்றிதழுக்கான ஜீவன் பிரமான் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1. ஜீவன்பிரமான் செயலியை பதிவிறக்கம் செய்ய, https://jeevanpramaan.gov.in இல் உள்ள 'Download' டேபைக் கிளிக் செய்யவும்.
2. மின்னஞ்சல் ஐடி, கேப்ட்சாவை வழங்கி, 'I agree to Download' என்பதைக் கிளிக் செய்யவும்.
3. உங்கள் மின்னஞ்சல் ஐடியில் OTP-ஐப் பெறுவீர்கள்.
4. அந்த OTP ஐ உள்ளிடவும்.
5. சரியான OTP ஐ உள்ளிடும்போது பதிவிறக்கப் பக்கம் தோன்றும். 'மொபைல் ஆப் பதிவிறக்கம்' என்பதைக் கிளிக் செய்யவும்.
5. உங்கள் மின்னஞ்சல்-ஐடியில் பதிவிறக்க இணைப்பைப் பெறுவீர்கள்.
6. இணைப்பை ஒரு முறை மட்டுமே கிளிக் செய்ய முடியும். அதன் பிறகு அது காலாவதியாகிவிடும்.
7. இணைப்பில் கிளிக் செய்யவும்.
8. அதன் பிறகு செயலி (apk file) பதிவிறக்கம் செய்யப்படும்.

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கியமான ஆவணம். ஜீவன் பிரமான் எனப்படும் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இது ஓய்வூதிய பணம் தடையின்றி வருவதை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க | EPF பங்களிப்பில் மாற்றம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: ஊழியர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News