Tax Regimes: உங்களுக்கு ஏற்ற வரிமுறை எது? பழையதா? புதியதா? எதில் வரிவிலக்கு கிடைக்கும் -முழுவிவரம்

Old Tax Regime Vs New Tax Regime: புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை குறித்து பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எந்த வரி அமைப்பில் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2023, 04:51 PM IST
  • 2023 ஆம் ஆண்டு முடியப் போகிறது.
  • நீங்கள் இதுவரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லையா?
  • டிசம்பர் 31, 2023 வரை அபராதத்துடன் ரிட்டன் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
Tax Regimes: உங்களுக்கு ஏற்ற வரிமுறை எது? பழையதா? புதியதா? எதில் வரிவிலக்கு கிடைக்கும் -முழுவிவரம் title=

Old Tax Regime Vs New Tax Regime: இந்திய குடிமக்களாகிய நமக்கு உள்ள பல கடமைகளில் வருமான வரியை செலுத்துவதும் மிக முக்கியமான கடமையாகும். இப்போது அரசாங்கம் வரி செலுத்த இரண்டு வழிகளை வழங்கியுள்ளது. அவை பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறை (New Tax Regime) என அழைக்கப்படுகின்றன. எனினும், புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை குறித்து பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எந்த வரி அமைப்பில் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்? இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.

வருமான வரி கணக்கு

2023 ஆம் ஆண்டு முடியப் போகிறது. நீங்கள் இதுவரை வருமான வரிக் கணக்கை தாக்கல் (ITR Filing) செய்யவில்லை என்றால், டிசம்பர் 31, 2023 வரை அபராதத்துடன் ரிட்டன் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. பட்ஜெட் 2023 இல், புதிய வரி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. பழைய மற்றும் புதிய வரி முறைக்கு இடையில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பலர் குழப்பத்தில் உள்ளனர். 

வரி கால்குலேட்டர் (Tax calculator)

மிக எளிதான முறையில் வரியைக் கணக்கிடலாம். வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்காக (taxpayers) வரி கால்குலேட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கால்குலேட்டரின் உதவியுடன், நீங்கள் எந்த வரி ஸ்லாப்பில் வருகிறீர்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். வரி கால்குலேட்டரின் உதவியுடன், இரண்டு வரி முறைகளிலிருந்தும் உங்களுக்காக சிறந்ததை நீங்கள் தேர்வு செய்யலாம். இரண்டு வரி முறைகளிலும் (Tax Regime) நீங்கள் வரி விலக்கு கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அளவிலான தொகையை நீங்கள் கோரலாம்

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக இருந்து, அவர் வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம். அவர் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரி செலுத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவர் இரண்டு வரி முறைகளிலும் வரி விலக்கு (Tax Exemption) கோரலாம். வரி விலக்கு கோருவதன் மூலம் அவர் தனது வருமானத்தை ரூ.9,50,000 ஆக அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | புத்தாண்டுக்குள் இந்த வேலைகளை முடிச்சிடுங்க: டிசம்பர் 31 நினைவிருக்கட்டும்

பழைய வரி விதிப்பில், வீட்டுக் கடனுக்கான வட்டியும் வருமானத்தில் கழிக்கப்படுகிறது, அதாவது இதற்குப் பிறகு அவரது நிகர வருமானம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரமாக இருக்கும். ஆனால், அதேசமயம் புதிய வரி விதிப்பில் அது ரூ.9,50,000 ஆக இருக்கும். ஏனெனில் புதிய வரி முறையில் வீட்டுக் கடன் வட்டிக்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. 

இந்த அளவு வரி செலுத்த வேண்டும்

பழைய வரி முறையின் அடிப்படையில், வீட்டுக்கடன் வாங்கிய அந்த நபர் ரூ.6 லட்சத்துக்கு ரூ.33,800 வரி செலுத்த வேண்டும். புதிய வரி முறையில் அவர் ரூ.54,600 வரி செலுத்த வேண்டி வரும். அத்தகைய சூழ்நிலையில், பழைய வரி முறையில் அவர் ரூ.20,800 வரை சேமிக்க முடியும். பழைய வரி முறையில், நீங்கள் வீட்டு வாடகை கொடுப்பனவு, அதாவது எச்ஆர்ஏ -ஐயும் (HRA) க்ளெய்ம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய வரி முறையில் ரூ.3 லட்சம் வரை விலக்கு கோரலாம்.

மேலும் படிக்க | White Ration Card: ஏழை மக்களுக்கு வெள்ளை ரேஷன் கார்டு! தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News