பரஸ்பரம் நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தருகின்றன என்பதால், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீண்ட கால முதலீட்டில், முதலீட்டாளர்களின் பணம் பனமடங்காகிறது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் ம்யூசுவல் பண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், எளிதில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.
பரஸ்பர நிதி முதலிடுகளில் எஸ்ஐபி என்னும் முறை அதிகம் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில், பரஸ்பர நிதியங்களில் நிலையான முதிர்வுத் திட்டங்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை நல்ல வருமானத்தை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை, சுமார் 50 நிலையான முதிர்வுத் திட்டங்கள் (Fixed Maturity Plans - FMP) தொடங்கப்பட்டுள்ளன. இது எஃப்டி முதலீடுகளை போல, ஒரு நிலையான காலத்திற்கான முதலீட்டு திட்டமாகும்.
பரஸ்பர நிதியத்தில் நிலையான முதிர்வுத் திட்டங்கள்
FMP திட்டத்தில், முதலீடுகள் பொதுவாக நிலையான காலத்திற்கு செய்யப்படுகின்றன. இந்த காலம் சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை இருக்கலாம். இந்த திட்டங்கள் பெருமபாலும் கடன் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன, எனவே ஆபத்து குறைவாக உள்ளது. அதே சமயத்தில் இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்களும் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இந்தத் திட்டங்களை மிகவும் விரும்புகின்றனர். இதன் மூலம் முதலீட்டினை பொறுத்து, ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம்.
FD முதலீட்டில் இருந்து FMP முதலீடுகள் எவ்வாறு வேறுபடுகிறது
நிலையான முதிர்வு திட்டம் என்பது ஒரு வகையான FD ஆகும். FD முதலீட்டில், உங்கள் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேசமயம் உங்கள் பணம் ஃபண்ட் ஹவுஸ் மூலம் கடன் நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது. நிலையான முதிர்வுத் திட்டங்கள் வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. அதேசமயம் வங்கிகளின் FD முதலீடுகள் ரெப்போ விகிதத்தால் பாதிக்கப்படுகின்றன.
பங்குச் சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் நிலவி வருவதால், பாதுகாப்பு கருதி, பரஸ்பர நிதியத்தில் நிலையான முதிர்வுத் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாக ரெப்போ விகிதத்தை உயர்த்தவில்லை. அதனால், வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளில் குறைந்த அளவு வருமானமே வருகிறது. மாறாக, இப்போது ரெப்போ விகிதம் குறைக்கபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
FD மீதான வட்டி விகிதம்
ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் FD மீதான வட்டி விகிதங்களை அதிகரிக்கும். ஆனால், குறைக்கப்பட்டும் போது, வங்கிகள் FD மீதான வட்டி விகிதத்தையும் குறைக்கலாம். அதாவது வரும் காலத்தில் FD மீதான வட்டி வருமானம் குறையக் கூடும் என்பதால், குறைந்த ஆபத்துள்ள முதலீடுகளை விரும்பும் நபர்களுக்கு நிலையான முதிர்வு திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
SIP முதலீடுகள்
நிலையான தொகை அல்லாமல், மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு SIP சிறந்த தேர்வாக இருக்கும். சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமான SIP முதலீட்டின் மூலம் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. SIP வருமானம் சந்தை அடிப்படையிலானது என்பதால், வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இருப்பினும், நீண்ட கால SIP முதலீட்டின் சராசரி வருமானம் சுமார் 12 சதவிகிதம் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த வருமானம் சந்தையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
(குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறவும்)
மேலும் படிக்க | Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ