ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அமைப்புசாரா துறையினருக்கு மிகப்பெரிய நற்செய்தியினை வழங்கியுள்ளது, அமைப்புசாரா துறையினரின் தினசரி ஊதியம் பெரும் தொழிலாளிகள் மற்றும் சிறிய அளவிலான தொழிலாளர்கள் அடங்குவார்கள். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் ஓய்வூதியத் திட்டத்தின் கவரேஜை அதிகரிக்க முடிவெடுத்து இருக்கிறது, இந்த புதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இபிஎஃப்ஓவின் இந்த திட்டம் உலகளாவிய ஓய்வூதியத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது, இதில் மாதந்தோறும் ரூ. 15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஒரு எளிய ஓய்வூதியத் தொகை கிடைக்கப்பெறும்.
மேலும் படிக்க | டிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன?
இபிஎஃப்ஓவின் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், குழந்தைகள் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும். இந்த ஓய்வூதிய பலன்களை பெற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை சேவையில் பங்களித்திருக்க வேண்டியது அவசியமாகும். உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களித்திருக்கும் உறுப்பினர் ஒருவர் 60 வயதிற்குள் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு இந்த திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வரை ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சமாக ரூ.3000 என்கிற கணக்கில் மொத்தமாக ரூ.5.4 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் அதிகளவில் ஓய்வூதிய தொகையை பெற விரும்பும் உறுப்பினர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் அதிகளவிலான தொகையை டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று இபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் இருபது தொழிலாளர்களுக்கு மேல் இருந்தாலோ அந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வாங்கினாலோ அவர்கள் இபிஎஃப்-ல் பங்களிப்பு அளிக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பணியாளர்களது அடிப்படை சம்பளத்திலும் 12% இபிஎஃப்-ல் பங்களிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | RTO சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ