Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

Business Idea In Tamil: 10 ஆயிரம் முதலீட்டை 40,000-50,000 மாதாந்திர வருமானமாக மாற்றலாம். அதிக வருமானம் ஈட்டும் சாத்தியம் கொண்ட மிகக் குறைந்த முதலீடு தொழில் குறித்து பார்ப்போம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2023, 06:21 PM IST
  • 10,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும், மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
  • வாகன புகை பரிசோதனை மையத்தை தொடங்க முதலீடு செய்தால் பணம் ஈட்டலாம்.
  • "வாகன புகை பரிசோதனை மையத்தை" தொடங்க அதிக பணம் தேவையில்லை.
Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்! title=

Business Tips In Tamil: தற்போதைய சூழலில் சிறு தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கானது. அதாவது சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதற்காக லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்யத் தேவையில்லை. சொந்தமாக தொழிலைத் தொடங்க நீங்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும், மாதம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி என்றால், அனைத்து வாகனங்களும் "வாகன புகை பரிசோதனை சான்று" பெற வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நீங்கள் "வாகன புகை பரிசோதனை மையத்தை" தொடங்கி அதில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம். வாருங்கள் வாகன புகை பரிசோதனை மையம் எப்படி திறப்பது, அதன் நிபந்தனைகள் என்ன, எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதைக் குறித்து பார்ப்போம்.

நீங்கள் வாகன புகை பரிசோதனை மையத்தை ஆரம்பிக்கும் நாளிலிருந்து உங்களுக்கு வருமானம் வரத் தொடங்கும். இந்தத் தொழிலைத் தொடங்க முயற்சி செய்தால், நீங்கள் தினமும் 1000 முதல் 1500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதாவது ஒவ்வொரு மாதமும் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

வாகன புகை பரிசோதனை மையம் லாபகரமான தொழில்:
அனைவரும் "வாகன புகை பரிசோதனை சான்றிதழ்" வைத்திருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியதால், இந்தியாவில் வாகன புகை பரிசோதனை மையம் வணிகம் லாபகரமாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதம் விதிக்க கடுமையான விதிமுறைகள் உள்ளன, மேலும் இதில் எந்த அலட்சியமும் அரசு பொறுத்துக்கொள்ளாது. கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் வாகனத்திற்கான "வாகன புகை பரிசோதனை சான்றிதழ்" பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். 

மேலும் படிக்க - 5 ஆண்டுகளில் அதிரடி லாபம் வேண்டுமா? இந்த 5 இடங்களில் முதலீடு செய்தால் போதும்

அதுமட்டுமில்லாமல் வாகனங்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை, வாகன புகை பரிசோதனை சான்று அவசியம். ஒருவேளை வாகன புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே வாகன புகை பரிசோதனை சான்றிதழ் அவசியமாகிறது.

வாகன புகை பரிசோதனை மையம் அமைக்க நிபந்தனைகள் என்ன?
இந்த வாகன புகை பரிசோதனை மையம் நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆட்டோ மெக்கானிக், ஆட்டோமொபைல் இன்ஜினியர், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், ஸ்கூட்டர் மெக்கானிக் அல்லது தொழில்துறை பயிற்சி நிறுவனத்திடமிருந்து சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் கட்டாயம் தேவை.

மேலும் படிக்க - Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘10’ ரூபாய் நோட்டு! லட்சங்களை அள்ளலாம்!

வாகன புகை பரிசோதனை மையம் அமைக்க எவ்வளவு முதலீடுசெய்ய வேண்டும்?
மாசுபடுத்தும் வாகனங்களை பரிசோதிக்கும் "வாகன புகை பரிசோதனை மையத்தை" தொடங்கினால் அதிக பணம் செலவாகாது. இந்த நிறுவனத்தை 10,000 ரூபாயில் தொடங்கலாம். மேலும் இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த மையத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு கடன் வழங்குகிறது.

வாகன புகை பரிசோதனை மையம் இருப்பிடம் முக்கியம்:
வாகன புகை பரிசோதனை மையத்தின் வருவாய் என்பது, நீங்கள் அந்த நிறுவனத்தை எந்த இடத்தில் அமைக்க போகுகிறீர்கள் என்பது ரொம்ப அவசியம். நீங்கள் அமைக்கும் நிறுவனத்தின் இருப்பிடத்தைச் சார்ந்து தான் உங்கள் வருவாயும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாகன புகை பரிசோதனை மையம் முக்கியமான நகர நெடுஞ்சாலையில் இருந்தால் வருமானம் நன்றாக இருக்கும். அதிகமாகவும், அடிக்கடி வாகனங்கள் செல்லும் சாலைகளில் அமைக்க வேண்டும். பொதுவாக, ரூ.10,000 முதலீட்டில் சரியான இடத்தில் இந்த மையத்தை உருவாக்கினால், ஒவ்வொரு மாதமும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க - EPFO மிகப்பெரிய அப்டேட்: ஊழியர்கள் இதை செய்வது அவசியம்.... சுற்றறிக்கை வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News