இந்தியா மரபணு மாற்றப்பட்ட 7,500 டன் சோயாமீலை இறக்குமதி செய்துள்ளது. மேலும் 4.5 லட்சம் டன் அளவிற்கான கொள்முதலையும் செய்ய திட்டமிட்டுள்ளது. திடீரென மரபணு மாற்றப்பட்ட சோயாவை இந்த அளவு வாங்குவதற்கான காரணம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.
கோழி தீவனத் தொழிலில் மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறது சோயா. தற்போது 7,500 டன் மரபணு மாற்றப்பட்ட (genetically modified) சோயாவை இந்தியா கடந்த சில வாரங்களில் தனது அண்டை நாடான பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. இந்தத் தகவலை மூத்த அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (2021, செப்டம்பர் 05) அன்று தெரிவித்தார்.
உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் (environment ministry and Director General of Foreign Trade) இந்த முடிவை எடுத்தது. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 12 லட்சம் டன் அளவிலான மரபணு மாற்றப்பட்ட சோயாமீலை (soyameal) இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி கொடுத்தது. பின்னர், ஆகஸ்ட் 24 அன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாமீல் இறக்குமதி தொடர்பான அறிவிப்பை DGFT வெளியிட்டது.
"இதுவரை சுமார் 7,500 டன் அளவிலான மரபணு மாற்றப்பட்ட சோயா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது" என்று அந்த அதிகாரி பிடிஐயிடம் தெரிவித்தார். பங்களாதேஷ், பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து வர்த்தகர்கள் மேலும் 4.5 லட்சம் டன் மரபணு திருத்தப்பட்ட சோயாமீலை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
READ ALSO | Health Benefits of Soya: அசைவத்திற்கு இணையான புரதம் கொண்ட சோயா
4.5 லட்சம் டன் ஆர்டர்களில், சுமார் 1.25 லட்சம் டன் பங்களாதேஷிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 75,000 டன் பிரேசிலிலிருந்தும், மீதமுள்ள 2.5 லட்சம் டன் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதியாகிறது.
"தேவைகளை பூர்த்தி செய்யவும், உள்நாட்டு சந்தையில் சோயாவின் விலைகளைக் கட்டுப்படுத்தவும் இந்த பெரிய அளவிலான இறக்குமதி அனுமதி உதவும்" என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிலோ 35 ரூபாய் என்ற விலையில் இருந்து தற்போது100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் தற்போது சோயாமீல் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், விலைகள் சற்று குறைந்து தற்போது கிலோ ஒன்றுக்கு 85 ரூபாயாக உள்ளது என்று அரசு அதிகாரி தெரிவித்தார்.
ஆரம்பத்தில், ஜவாஹர்லால் நேரு துறைமுகம் (Jawaharlal Nehru Port) வழியாக மட்டுமே மரபணு மாற்றப்பட்ட சோயா இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது, ஆனால், அக்டோபர் 31 வரை மட்டுமே இறக்குமதி செய்வதற்கான காலவரையறை இருப்பதால், 12 லட்சம் டன் ஜிஎம் சோயாமீல் இறக்குமதியை அடைவது மிகவும் கடினம் என்று கூறப்பட்டது. எனவே, மும்பை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கும் சோயாமீலை கொண்டு வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
READ ALSO | Ration Card விதிகளில் முக்கிய மாற்றம்; இனி உங்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR