மத்திய அரசின் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டுக் கடன் மானியம்... கனவு இல்லம் இனி நனவாகும்!

வீட்டுக் கடன் மானியத் திட்டம்: நகரங்களில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கான புதிய வீட்டுக் கடன் மானியத் திட்டத்தை மத்திய அரசு  திட்டமிட்டு வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 15, 2023, 08:11 PM IST
  • வீட்டுக் கடன் மானியத் திட்டத்தை இன்னும் சில மாதங்களில் தொடங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
  • கடன் மானியத் திட்டம் அமல்படுத்தப்படும் தேதி உறுதி செய்யப்படவில்லை.
  • வட்டி மானியம் பயனாளிகளின் வீட்டுக் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மத்திய அரசின் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டுக் கடன் மானியம்... கனவு இல்லம் இனி நனவாகும்! title=

வீட்டுக் கடன் மானியத் திட்டம்: நகரங்களில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கான புதிய வீட்டுக் கடன் மானியத் திட்டத்தை மத்திய அரசு  திட்டமிட்டு வருகிறது. சிறு குடும்பங்களுக்கு புதிய வீட்டுக் கடன் மானியத் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 25 லட்சம் குறைந்த வருமானம் உடையவர்கள் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. அதன் மானியம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் மானியத்தின் அளவு குடும்பங்களின் தேவையைப் பொறுத்தது.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi)  அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் சுமார் 60,000 கோடி (சுமார் 7.2 பில்லியன் டாலர்கள்) செலவிடும். இதன் கீழ் 25 லட்சம் வீட்டுக் கடன் விண்ணப்பதாரர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தை இன்னும் சில மாதங்களில் தொடங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.  எனினும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் தேதி உறுதி செய்யப்படவில்லை.

வீட்டு கடன் மானிய திட்டத்தின் மூலம் யாருக்கு பலன் கிடைக்கும்?

2023ம் ஆண்டின் சுதந்திர தின உரையின் போது, ​​புதிய திட்டத்தின் மூலம் நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு அரசாங்கம் மலிவான வீட்டுக் கடன்களை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தனது அரசாங்கத்தின் இந்தத் திட்டம் வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள் அல்லது சாவல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

வீட்டு கடன் மானிய திட்டத்தின் மூலம் கிடைக்கும்  வட்டி மானியம் மற்றும் கடன் தொகை

இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, புதிய திட்டத்தின் கீழ், 9 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படலாம் மற்றும் 3 சதவிகிதம் முதல், 6. 5 சதவிகிதம்வரையிலான ஆண்டு வட்டி மானியம் வழங்கப்படலாம்.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு அடிச்சுது லாட்டரி: விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்

வீட்டு கடன் மானிய திட்டதின் பலனை பெறுவதற்கான தகுதி

50 லட்சத்துக்கும் குறைவான வீட்டுக் கடன்களுக்கு 20 ஆண்டுகளுக்கு இந்த மானியம் கிடைக்கும் என்று  செய்தி அறிக்கை ஒன்றில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வட்டி மானியம் பயனாளிகளின் வீட்டுக் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கான அமைச்சரவை ஒப்புதல் விரைவில் வரலாம்.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள திட்டம்

கடனில் பெறப்பட்ட மானியம் நேரடியாக கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படும். உழைக்கும் வருமானம் உள்ளவர்களுக்கும், ரூ.25 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மக்களுக்கு நிதி ரீதியாக பலனளிக்கும் இதுபோன்ற வீட்டுக்கடன் திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். மோடி அரசு 2024 தேர்தலுக்கு முன் அதைத் தொடங்க விரும்புகிறது. நகரங்களில் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். திட்ட நடைமுறைகள் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க | Penalty: வங்கிகளே சட்டத்தை மதிக்கவில்லை என்றால்? RBI கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News