தீபாவளிக்கு முன் வந்த நல்ல செய்தி.. ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் எடுத்த 5 முக்கிய முடிவுகள்

India's Retail Inflation: சில்லறை பணவீக்கம் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2023, 03:05 PM IST
  • வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தவில்லை.
  • விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் நன்மைகள்.
  • நாடு முழுவதும் உள்நாட்டு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு முன் வந்த நல்ல செய்தி.. ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் எடுத்த 5 முக்கிய முடிவுகள் title=

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் வீழ்ச்சி: தீபாவளிக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்துள்ளது. சில்லறை பணவீக்கம் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 6.83 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், செப்டம்பரில் 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கமும் செப்டம்பர் மாதத்தில் 6.56 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சில்லறை பணவீக்க விகிதம் 5.33 சதவீதம் மற்றும் 4.65 சதவீதமாக இருந்தது. 

இதற்கு காரணம் என்ன? இது எப்படி நடந்தது? இதற்குப் பின்னால் அரசாங்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) 5 முடிவுகள் பெரிய காரணங்களாக இருக்கின்றன. இதை பற்றி இந்த பதிவொல் காணலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறைப்பு மற்றும் நிலைத்தன்மை

நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. எண்ணெய் விலை நிலையாக உள்ளது. விலைகள் குறைக்கப்படவும் இல்லை, அதிகரிக்கவும் இல்லை. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. கடந்த மே மாதம் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை சீராக உள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 குறைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையும் சரிந்ததால், எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்தன. இது பணவீக்க விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தவில்லை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தை அதிகரிக்காததால் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை. பணவீக்கத்தை குறைக்கவே வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா மாற முயற்சிப்பதாகவும், எனவே இந்த காலாண்டில் ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக இருக்கும் என்றும் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இது மூன்றாம் காலாண்டில் 5.7 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.2 சதவீதமாகவும் இருக்கும். 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்க விகிதம் 5.2 சதவீதமாக இருக்கும் என்று அவர் கணித்திருந்தார். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்படாமல் இருந்ததன் தாக்கமும் பணவீக்கத்தில் இருந்தது. 

மேலும் படிக்க | HRA கொடுப்பனவிற்கு வரி விலக்கு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படும்!

விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் நன்மைகள்

நாட்டில் பொருட்களின் விநியோகச் சங்கிலியை (Supply Chain) வலுப்படுத்துவது பணவீக்க விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இந்திய அரசு சாலைகளின் வலையமைப்பை அமைத்துள்ளது. சரக்கு ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. சாலை வலையமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலம் மற்றும் நகரத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தியது. தேவையை பூர்த்தி செய்வதால், பொருட்களின் விலைகள் குறைந்து, பணவீக்க விகிதமும் குறைந்தது.

நாடு முழுவதும் உள்நாட்டு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது

ரெப்போ ரேட் (Repo Rate) உயர்த்தப்படாததால், இஎம்ஐ விகிதங்கள் அதிகரிக்கவில்லை. இதனால் மக்கள் பயனடைந்தனர். நாட்டில் உள்நாட்டு பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கையில் அதிக பணம் இருப்பதால், மக்களின் செலவு செய்யும் விகிதமும் அதிகரித்துள்ளது. அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது எளிதாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு தேவை அதிகரிப்பு பணவீக்க விகிதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

எரிசக்தி விலை குறைப்பால் பலன் கிடைக்கும்

பணவீக்க விகிதம் குறைவதற்கு ஒரு காரணம் குறைந்த எரிசக்தி விலை. பெட்ரோல், டீசல் விலை உயராததால், தொழிற்சாலைகளில் விலை குறைந்துள்ளது. விலைக் குறைப்பு காரணமாக, தயாரிப்பு மலிவானது, இது மக்களின் பணத்தை மிச்சப்படுத்தியது, பணவீக்க விகிதத்தையும் குறைத்தது.

மேலும் படிக்க | 40,000 ரூபாயில் ஐரோப்பிய பயணம்... ஏர் இந்தியா வழங்கும் அசத்தல் சலுகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News