National Savings Scheme: தபால் அலுவலகத்தின் அட்டகாசமான திட்டம்... அசத்தல் வட்டி, வரி விலக்கு

National Saving Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்ற ஒரு டெபாசிட் திட்டமாகும். இதில் 5 ஆண்டுகளுக்கு தொகை டெபாசிட் செய்யப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 11, 2024, 06:57 PM IST
  • NSC: முதலீடிற்கான அளவுகள் எவ்வளவு?
  • வரி விலக்கு கிடைக்கும்.
  • திட்டத்தை நீட்டிப்பதற்கான விதிகள் என்ன?
National Savings Scheme: தபால் அலுவலகத்தின் அட்டகாசமான திட்டம்... அசத்தல் வட்டி, வரி விலக்கு title=

National Saving Certificate: முதலீட்டு திட்டங்கள் பற்றிய தேடலில் இருப்பவர்கள் வரி இல்லா ஃபிக்ஸ்ட் டெபாசிட் பற்றி கேள்விபட்டிருப்பார்கள். 5 ஆண்டுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட் வரி இல்லா எஃப்டி அதாவது டேக்ஸ் ஃப்ரீ எஃப்டி (Tax Free FD) எனப்படுகின்றது. பலர் வரியை சேமிக்க இந்த எஃப்டி -இல் முதலீடு செய்கிறார்கள். தபால் அலுவலக திட்டங்களிலும் இப்படிப்பட்ட திட்டங்கள் உள்ளன. அஞ்சல் அலுவலகத்தில் ஒரு அற்புதமான திட்டம் உள்ளது. இதன் மூலம் வரியை சேமிக்க முடிகின்றது. மேலும் இந்த திட்டம் 5 வருட எஃப்டி -ஐ விட சிறந்த வட்டியையும் வழங்குகிறது. தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் தான் அந்தத் திட்டம். 

தேசிய சேமிப்புச் சான்றிதழும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்ற ஒரு டெபாசிட் திட்டமாகும். இதில் 5 ஆண்டுகளுக்கு தொகை டெபாசிட் செய்யப்படுகின்றது. தற்போது இந்த திட்டத்தில் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடர்பான சிறப்பு விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.

வரி இல்லாத எஃப்டியில் எதில் எவ்வளவு வட்டி கிடைக்கின்றது? 

- தபால் அலுவலகம் - 7.5 சதவீதம்
- பாரத ஸ்டேட் வங்கி - 6.5 சதவீதம்
- பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.5 சதவீதம்
- பாங்க் ஆஃப் இந்தியா - 6.5 சதவீதம்
- எஸ்டிஎஃப்சி - 7 சதவீதம்
- ஐசிஐசிஐ - 7 சதவீதம்

முதலீட்டாளர்கள் தங்கள் குழந்தையின் பெயரிலும் என்எஸ்சி -இல் முதலீடு செய்யலாம்.

- இந்திய குடிமக்கள் அனைவரும் அஞ்சல் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழில் (National Saving Certificate) முதலீடு செய்யலாம். 

- குழந்தையின் பெயரில் NSC கணக்கைத் திறக்க விரும்பினால், அதையும் திறக்கலாம். 

- 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை தனது சொந்த பெயரிலும் NSC சான்றிதழை வாங்க முடியும். 

- இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.

மேலும் படிக்க | ஆதார் கார்டில் உங்களால் என்ன என்ன தகவல்களை மாற்ற முடியும்?

NSC: முதலீடிற்கான அளவுகள் எவ்வளவு? 

- ஒரு முதலீட்டாளர் என்எஸ்சி -இல் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம்.

- அதன்பிறகு ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம். 

- இதில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. 

- இந்த திட்டம் வெறும் 5 ஆண்டுகளிலேயே முதிர்ச்சியடைந்துவிடும். 

- இதில் வருடாந்திர அடிப்படையில் வட்டி கூட்டப்படுகிறது.

- இதில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். 

- 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் உங்கள் முதலீட்டின் போது பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின் படி கணக்கிடப்படுகிறது. 

- இதற்கிடையில் வட்டி விகிதம் மாறினாலும், அது முதலீட்டாளரின் கணக்கைப் பாதிக்காது.

வரி விலக்கு கிடைக்கும்

என்எஸ்சியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், மற்ற திட்டங்களைப் போலன்றி, இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பகுதியளவு தொகையை எடுக்க முடியாது. அதாவது, 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். இந்த கணக்கை பின் வரும் சில சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே ப்ரீமெச்யூர் க்ளோசர் செய்ய முடியும். 

- ஒரே கணக்கு அல்லது கூட்டுக் கணக்கில் உள்ள யாரேனும் ஒருவர் அல்லது கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இறந்தால்.

- கெசட்டட் அதிகாரியாக இருந்து அடமான பறிமுதல் செய்யபட்டால். 

- நீதிமன்ற உத்தரவின் பேரில்.

திட்டத்தை நீட்டிப்பதற்கான விதிகள் என்ன?

முதிர்ச்சியடைந்த பிறகும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு NSC -ஐ தொடர விரும்பினால், அதற்கு முதலீட்டாளர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இது புதிய தேதியின் வைப்புத்தொகையாகக் கருதப்படும். மேலும் அந்த தேதியில் வாங்கப்பட்ட புதிய சான்றிதழின் வட்டிக்கு ஏற்ப வட்டியின் பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | சென்னை - நாகர்கோயில் வழித்தடத்தில் சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்... முழு விபரம் இதோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News