ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச சுகாதார பாதுகாப்பு

Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களின் நிதி நிலையை பொருட்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 12, 2024, 09:26 AM IST
  • 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல்.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இலவச காப்பீட்டின் மதிப்பு ரூ.5லட்சமாக இருக்கும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச சுகாதார பாதுகாப்பு title=

Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana: மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியை வழங்கியுள்ளது. தேசிய காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களின் நிதி நிலையை பொருட்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டம் மூலம் ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலவச காப்பீட்டின் மதிப்பு ரூ.5லட்சமாக இருக்கும். இது குடும்ப அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த ஒப்புதல் மூலம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலை பொருட்படுத்தப்படாமல். AB PM-JAY இன் பலன்களைப் பெற தகுதியுடையவர்களாவார்கள். தகுதியான மூத்த குடிமக்களுக்கு AB PM-JAY-ன் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே AB PM-JAY -இல் உள்ள மூத்த குடிமக்கள்:

ஏற்கனவே AB PM-JAY இன் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள். (இதை அவர்கள்  70 வயதுக்குட்பட்ட குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை) என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

CGHS எனப்படும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (Central Government Health Scheme), ECHS எனப்படும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (Ex-Servicemen Contributory Health Scheme), மற்றும் CAPF எனப்படும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (Central Armed Police Force) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இந்த திட்டங்கள் அல்லது தற்போதைய ஆயுஷ்மான் திட்டத்திற்கு இடையில் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்யலாம். 

தனியார் மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகள் 

தனியார் மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் AB PM-JAY இன் கீழ் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Ayushman Bharat: சிறப்பம்சங்கள்

- ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி பெறும் சுகாதார உறுதித் திட்டமாகும்.
- இதில்  மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படுகின்றது.
- இதன் கீழ் 12.34 கோடி குடும்பங்களின் சுமார் 55 கோடி பேர் பயனடைகிறார்கள்.
- வயதைப் பொருட்படுத்தாமல் தகுதியுள்ள குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களும் இந்தத் திட்டத்தின் கவர் செய்யப்படுகிறார்கள்.
- இத்திட்டத்தின் கீழ் 7.37 கோடி பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
- இதில்  49 சதவீத பெண் பயனாளிகளும் அடங்குவர்.
- இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 10 ரூபாய் நாணயம், 100 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாத? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

பல வித நன்மைகளைக் கொண்டுள்ள இந்த திட்டம் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் விரிவாக்கப்படும் என்றும், அவர்களது பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் மருத்துவ காப்பீடு அளிக்கபப்டும் என்றும் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

AB PM-JAY திட்ட பயனாளிகள்

- AB PM-JAY திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. 

- தொடக்கத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினரை உள்ளடக்கிய 10.74 கோடி ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன.

- அதன் பின்னர், 2022 ஜனவரியில், AB PM-JAY திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 10.74 கோடியில் இருந்து 12 கோடி குடும்பங்களாக அதிகரித்தது. 

- இதன் பிறகு மீண்டும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுவதும் பணிபுரியும் 37 லட்சம் ஆஷா பணியாளர்கள் / ஏடபிள்யூடபிள் / ஏடபிள்யூஹெச் மற்றும் அவர்களது குடும்பங்களும் இலவச சுகாதாரப் பலன்களுக்கான வரம்பில் சேர்க்கப்பட்டார்கள்.

- தற்போது இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, AB PM-JAY -இன் கீழ், நாடு முழுவதும் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | EPS பம்பர் செய்தி: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News