ரேஷன் கார்டு புதுப்பிப்பு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப் பெரிய முக்கிய செய்தி. அந்த வகையில் நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனெனில் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையெனில், பின்னர் இலவச ரேஷன் வசதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். அந்தவகையில் ரேஷன் கார்டை மக்கள் தங்களின் ஆதாருடன் இணைக்க அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 தேதியாகும், இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு நீங்கள் இலவச ரேஷன் பெரும் பலனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உணவு துறையினர் தகவல் தெரிவித்தனர்
இந்த நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ரேஷன் கார்டு இணைக்கும் தேதி தற்போது நெருங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைத்த பிறகு, தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் பங்கு உணவு தானியங்கள் கிடைக்கிறதா இல்லையா என்பதை எளிதாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் விரைந்து அதை இணைப்பது நல்லது இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | Employee Pension Scheme: ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!
ஜூன் 30க்குள் கால அவகாசம்
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆம் தேதியாகும். உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. எனவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இலவச ரேஷன் பெற்று வரும்பவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
ஆதார்-ரேஷன் கார்டை எப்படி இணைப்பது?
* uidai.gov.in என்ற வெப்சைட்டில் செல்லவும்.
* இப்போது 'Start Now' என்பதை கிளிக் செய்யவும்.
* அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
* இப்போது 'Ration Card Benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு ஆதார் நம்பர், ரேஷன் கார்டு நம்பர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP நம்பரை நிரப்பி submit கொடுக்க வேண்டும்.
ஆதார்-ரேஷன் கார்டை நேரடியாக எப்படி இணைப்பது?
நேரடியாக சென்று ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க விரும்பினால், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ