IRCTC: இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்காக சிறப்பு வந்தேபாரத் ரயில்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

IND Vs PAK: அகமதாபாத்தில் நடைபெறும் போட்டிகளுக்காக இந்திய ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளது என்ற செய்தி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2023, 08:11 AM IST
  • அகமதாபாதிற்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்
  • இந்திய ரயில்வேயின் சிறப்பு முன்னேற்பாடு
  • இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு சிறப்பு ரயில்
IRCTC: இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்காக சிறப்பு வந்தேபாரத் ரயில்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம் title=

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு பயணிக்கும் ரசிகர்களுக்கு வசதியாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கும். இது இந்திய ரயில்வேக்கு வருவாயை அள்ளித்தரும் என்று சொல்லப்படுகிறது. ODI உலகக் கோப்பை 2023 தொடங்கும் நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஒரே ஒரு போட்டிக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய நிலையில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. 

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறந்ங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.

இதற்கு அடுத்தாற்போல, அகமதாபாதில் நடைபெறவிருக்கும் போட்டியில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் தொடர்பாக அனைவரின் கவனமும் அகமதாபாத் மீது குவிந்துள்ளது. இந்தப் போட்டியைக் காண மக்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் அகமதாபாதில், தங்கும் வசதி மற்றும் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகம் உயர்ந்துள்ளது. இதனால், அகமாதாபாதில் ரசிகர்கள் வந்து தங்குவதற்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக, இந்திய ரயில்வே வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | வந்தே பாரத் ரயில்களில் இவ்வளவு வசதிகளா? ஆச்சரியமளிக்கும் படங்கள்!

தகவல்களின்படி, அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு பயணிக்கும் ரசிகர்களுக்கு வசதியாக அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கும். இதற்கான முன்னெற்பாடுகள் தொடங்கிவிட்டன.

இதனால்,, போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ரசிகர்கள் அகமதாபாத் நகருக்கு வருவார்கள். அதேபோல, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி முடிந்ததும், நேராக ரயில் நிலையத்திற்கு வந்து வீடு திரும்பலாம். அதாவது, அவர்கள் அகமதாபாதில் தங்கும் செலவுகள் இருக்காது. அதேபோல, விமான டிக்கெட்டுகளுக்காக அதிக செலவும் செய்ய வேண்டாம். 

அபரிமிதமான விமானக் கட்டணம், தங்குமிடமின்மை, ஹோட்டல் கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிந்ததும் மக்கள் வீடு திரும்பலாம் என்பதே இந்த ரயில்களை இயக்குவதன் பின்னணியில் இருப்பதாக இந்தியன் ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு இடங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் சபர்மதி மற்றும் அகமதாபாத் நிலையங்களில் நிறுத்தப்படும், இவை இரண்டும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அருகாமையில் உள்ளன என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையில் கலக்கப்போவது யாரு...? - கவனிக்க வேண்டிய 10 முக்கிய வீரர்கள்!

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு உலகக் கோப்பை பல்வேறு மாநிலங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளது. அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தர்மசாலா, கவுகாத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர் மற்றும் மும்பை என பல்வேறு நகரங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பைப் போட்டித்தொடரை இந்தியா நடத்தினாலும், அவை பிறற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் தற்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரை இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2019 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான நடைபெறும் மோதலுடன் ஐசிசி உலக கோப்பை 2023 அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. அக்டோபர் 5 ஆம் தேதியான நாளை இந்தப் போட்டி நடைபெறுகிறது. லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.

மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News