Indian ceramics இந்திய செராமிக் மற்றும் சானிடரி பொருட்களுக்கு உலக சந்தையில் மவுசு

இந்திய மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் ஏற்றுமதி இந்த பொருளாதார மந்தநிலையிலும் ஏற்றம் பெற்றுள்ளது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2022, 07:49 PM IST
  • இந்திய செராமிக் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு
  • பொருளாதார மந்த நிலையிலும் ஏற்றுமதி அதிகரித்தது
  • 2021-22 ஆம் ஆண்டில் 3464 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செராமிக் மற்றும் சானிடரி பொருட்கள் ஏற்றுமதி
Indian ceramics இந்திய செராமிக் மற்றும் சானிடரி பொருட்களுக்கு உலக சந்தையில் மவுசு title=

புதுடெல்லி: இந்திய மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் ஏற்றுமதி இந்த பொருளாதார மந்தநிலையிலும் ஏற்றம் பெற்றுள்ளது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். 

இந்திய மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்றம் உள்ளது. இந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி 2021-22 ஆம் ஆண்டில் 3464 மில்லியன் அமெரிக்க டாலர்களாக சாதனை படைத்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஏற்றுமதி 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை "சாதனை" தொட்டதாக வர்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

செராமிக் டைல்ஸ் மற்றும் சானிடரிவேர் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் ரஷ்யா மோதலின் எதிரொலியால் முடங்கும் நீலகிரி தேயிலை ஏற்றுமதி

உலகின் இரண்டாவது பெரிய டைல்ஸ் உற்பத்தியாளராக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி பேக்கிங் பொருட்கள், பீங்கான் சானிட்டரி சாதனங்கள், கண்ணாடி, நிறமுள்ள கம்பி அல்லாத கண்ணாடி, கண்ணாடி மணிகள் மற்றும் கண்ணாடி கம்பளி என பலவிதமான கண்ணாடிப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  

இந்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு கணிசமாக உள்ளது. 

சவுதி அரேபியா, அமெரிக்கா, மெக்சிகோ, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், ஓமன், இந்தோனேஷியா, இங்கிலாந்து மற்றும் போலந்து உட்பட சுமார் 125க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செராமிக்ஸ் மற்றும் சானிடரி வேர் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

மேலும் படிக்க | பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா

"பல ஆண்டுகளாக, தொழில்துறையானது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்பு விவரங்கள், தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் நவீனமயமாக்கப்பட்டு, உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் நவீன உலகத் தரம் வாய்ந்த தொழிலாக வெளிவருகிறது" என்று இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முன்னதாக, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை மற்றும் உக்ரைன் போரினால் இந்தியாவின் தேயிலை ஏற்ருமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 40 மில்லியன் கிலோ தேயிலை ரஷ்யாவிற்கும், இதே போன்று 15 மில்லியன் கிலோ உக்ரைனிற்கும் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, இதில் 40 சதவீதம் வரை நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன் 

இப்பணிகள் விரைந்து முடிந்தால் ஏற்றுமதிக்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் என்று தேயிலை வர்த்தக நிபுணர் தெரிவித்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News