உங்கள் ரயில் டிக்கெட் RAC ஆ..? அப்போ கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள்

RAC on Indian Railway: ரயிலில் கன்பார்ம் சீட் டிக்கெட் கிடைக்காதபோது, ​​அச்சமயம் RAC டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த ஆர்ஏசி டிக்கெட்டின் அர்த்தம் என்ன, ஏசி கோச்சில் ஆர்ஏசி டிக்கெட் பெறும்போது படுக்கையறை அதாவது போர்வை-தலையணை மற்றும் பெட்ஷீட் கிடைக்குமா என்பதற்கான முழு தகவலை அறிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 12, 2023, 09:42 AM IST
  • RAC என்பது ரத்து செய்தலுக்கு எதிரான முன்பதிவு.
  • RACக்குப் பிறகு, காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • இந்திய ரயில்வேயில் RAC டிக்கெட்டின் அர்த்தம் என்ன.
உங்கள் ரயில் டிக்கெட் RAC ஆ..? அப்போ கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள் title=

RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் ரயில்களில் எந்தெந்த வசதிகள் கிடைக்குமா: ரயிலில் நீங்கள் பலமுறை பயணம் செய்திருப்பீரகள். பல சமயங்களில் கன்பார்ம் சீட் டிக்கெட் கிடைக்காதபோது, RAC டிக்கெட் வழங்கப்படும். இந்த RAC என்பது ரத்து செய்தலுக்கு எதிரான முன்பதிவு. அதாவது கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் உள்ள பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால், RAC பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்படும். RACக்குப் பிறகு, காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அந்த சீட் கன்பார்ம் செய்யப்படாவிட்டால், அந்த பயணிக்கு அமர்ந்து பயணிக்க பாதி இருக்கை வழங்கப்படும். இப்போது ஏசி கேபினில் ஆர்ஏசி டிக்கெட் பெற்றிருந்தால், தலையணை, பெட்ஷீட், போர்வை போன்ற வசதிகள் கிடைக்குமா இல்லையா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விரிவான பதில்களை இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இருக்கை 2 பேருக்கு பகிரப்படுகிறது
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, RAC டிக்கெட்டைப் பெறும்போது, ​​இரண்டு பயணிகளுக்கு இடையே ஒரு பெர்த் பிரிக்கப்படுகிறது. அதாவது ஆர்ஏசி டிக்கெட் பெற்ற 2 பயணிகள் ஒரே சீட்டில் அமர்ந்து பயணிக்க வேண்டும். இவர்களுக்கு படுக்க இருக்கை கிடைக்கவில்லை. இருப்பினும், பரஸ்பர சம்மதத்துடன், பயணிகள் இருவரும் மாறி மாறி அந்த இருக்கையில் தூங்கலாம். உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையில் இருந்து எந்தப் பயணியும் இருக்கை ரத்து செய்யப்பட்டால், உறுதிசெய்யப்பட்ட இருக்கை RAC அந்தஸ்துள்ள பயணிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission அதிரடி அப்டேட்: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு

இந்த விதி RAC கொண்ட பயணிகளுக்கானது
இப்போது ஆர்ஏசி பயணிகளுக்கு ஏசி கோச்சில் தலையணை, போர்வை, பெட்ஷீட் வசதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தால், ஆம் என்பதுதான் இதற்கான பதில். உண்மையில், முந்தைய ஆர்ஏசி பயணிகள் இந்த வசதியைப் பெற்றதில்லை, இதனால் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் குளிரால் சிரமப்பட்டனர். பயணிகளின் இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு, 2017 ஆம் ஆண்டு முதல் ஆர்ஏசி உள்ள பயணிகளுக்கு இந்த வசதியை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி RAC இருக்கையில் அமர்ந்திருக்கும் இரண்டு பயணிகளுக்கும் தலையணை, 1-1 பெட்ஷீட் மற்றும் ஒரு போர்வை வழங்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகளைக் கொண்ட பயணிகளுக்கு 1 தலையணை, 2 பெட்ஷீட்கள், 1 போர்வை மற்றும் 1 துண்டு வழங்கப்படும்.

'வெயிட்டிங் லிஸ்ட்' பயணிகளுக்கும் இந்த வசதிகள் கிடைக்குமா?
பல சமயங்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பின், 'வெயிட்டிங் லிஸ்ட்' என, அதன் ஸ்டேட்டஸில் எழுதப்பட்டிருக்கும். டிக்கெட் முன்பதிவு உறுதிசெய்யப்பட்டு ஆர்ஏசிக்குப் பிறகு இது மூன்றாவது வகை. அதாவது, கன்பார்ம், RAC டிக்கெட் செய்யப்பட்ட பிறகு ஏதேனும் இருக்கை காலியாக இருந்தால், அது வெயிட்டிங் லிஸ்ட் பட்டியல் பயணிகளுக்கு ஒதுக்கப்படும். பொதுவாக, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு கன்பார்ம் இருக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் 50-50 சதவீதமே இருக்கும். அதேபோல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் பெற்றவர்கள் முன்பதிவு செய்து ரயில் பெட்டியில் பயணிக்க முடியாது. அத்தகைய பயணிகள் அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் பயணிக்க முடியும். அத்தகைய பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படாது.

மேலும் படிக்க | Old Pension திட்டத்தில் முக்கிய மாற்றும்..புதிய அப்டேட்டை வெளியிட்ட அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News