தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியானது ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வங்கி அதிகரித்துள்ள வட்டி விகிதமானது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3.50 % முதல் 6.00% வரை வட்டி விகித உயர்வும், 3 ஆண்டுகள், 1 நாள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்
மேலும் வங்கியானது 7 முதல் 29 நாட்களுக்கு இடைப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3.50% வட்டியும், 30 முதல் 90 நாட்களுக்கு இடைப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 4% வட்டியும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, 91 முதல் 180 நாட்களுக்கு முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50% வட்டியும், 181 நாட்கள் முதல் வருடத்திற்கு உள்ள டெபாசிட்டுக்கு 5.75% வட்டியும் வழங்குகிறது. 1 வருடம் 1 நாள் - 3 ஆண்டுகளில் முதிர்ச்சிடையும் டெபாசிட்டுகளுக்கு 6.25% வட்டியையும் வழங்கும், இது முன்னர் 6.00% ஆக இருந்து. 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான முதிர்ச்சியடைந்த டெபாசிட்டுகளுக்கு 6.25%க்கு பதிலாக 6.50% வட்டியும், 25 அடிப்படை புள்ளிகளையும் வழங்குகிறது.
5-10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கியானது 6% வட்டியை வழங்குகிறது, வரி சேமிப்பாளர் டெபாசிட்டுகளுக்கு 6.50% வட்டியை வழங்குகிறது. மேலும் ஐடிஎப்சி வங்கியானது மூத்த குடிமக்களின் நலனுக்காக சிலவற்றை செய்துள்ளது. இதுகுறித்து அதன் இனைய பக்கத்தில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் தொகையானது மற்றவர்களை காட்டிலும் 0.50% கூடுதலாக தான் இருக்கும். மேலும் என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ போன்ற ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு கிடைக்காது. மூத்த குடிமக்களின் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4% முதல் 6.50% வட்டியும், 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு அவர்களுக்கு அதிகபட்சமாக 7% வட்டி விகிதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மில்லியனர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR