உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கா? அப்போ ஜாக்பாட்... உடனே தெரிஞ்சிக்கோங்க

போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2023, 08:47 PM IST
  • ரேஷன் கார்டு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன.
  • இலவச அந்த்யோதயா அன்ன யோஜனாவைப் பெற ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு கட்டாயம்.
  • ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க எளிதான வழி.
உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கா? அப்போ ஜாக்பாட்... உடனே தெரிஞ்சிக்கோங்க title=

ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு: உங்கள் ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2023 ஆகும். இந்த தகவலை நுகர்வோர் விவகாரங்கள் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) கடந்த 7 ஆம் தேதி அறிவித்திருந்தது.

முன்னதாக இந்த காலக்கெடு ஜூன் 30 ஆக இருந்தது
இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் அந்தோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை உள்நாட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வெள்ளை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டை முதலில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் அதன் பிறகுதான் ஆதார் அட்டையுடன் இணைக்க முடியும் என்றும் கூறபட்டுள்ளது.

மேலும் படிக்க | தினமும் ரூ. 100 தனியாக சேமியுங்கள்... அதில் உங்களுக்கு பிடித்த காரையே வாங்கலாம்! - அது எப்படி?

மேலும் முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அப்படி இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அத்துடன், இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், இந்த கூடுதல் அவகாசம் தரப்பட்டும்கூட, ஆதார் எண்ணை, ரேஷன் கார்டுடன் சிலர் இணைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு தரப்பட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை மறுபடியும் அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்
இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக் கொள்ளலாம். இதனால் தான் ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் ஆன்லைனில் எப்படி இணைப்பது

1. முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். 
2. பிறகு நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க. 
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும். 
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். 
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும். 
6. பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். 
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள். 
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

மேலும் படிக்க | லட்சங்களை அள்ளித்த தரும் அரிய ‘5’ ரூபாய் நோட்டு... உங்ககிட்ட இருக்கா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News