இனி பான் கார்டு வாங்குறது ரொம்ப சிம்பிள், உடனே இதை படியுங்கள்

தற்போது முன்பை விட பான் கார்டு பெறுவது என்பது எளிதாகிவிட்டது. அதன்படி வீட்டில் அமர்ந்து பான் கார்க்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 16, 2022, 10:09 AM IST
  • இன்ஸ்டன்ட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி.
  • வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம், செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்.
  • பான் கார்டு செய்வது எப்படி.
இனி பான் கார்டு வாங்குறது ரொம்ப சிம்பிள், உடனே இதை படியுங்கள் title=

இன்ஸ்டன்ட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி: தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் பான் கார்டு இல்லாமல் எந்த ஒரு நபரின் அதிகாரப்பூர்வ வேலையும் நடக்காது. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு இவை அனைத்தும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. வருமான வரி தொடர்பான பணிகளுக்கும், வங்கி தொடர்பான பணிகளுக்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பான் கார்டு இல்லாதது உங்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கலாம். எனவே உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால், விரைவில் அதற்கு விண்ணப்பிக்கவும். இதை பெறுவது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது மற்றும் எப்படி பெறுவது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

பான் கார்டு அப்ளை செய்வது எப்படி 
தற்போது முன்பை விட பான் கார்டு பெறுவது என்பது எளிதாகிவிட்டது. அதன்படி வீட்டில் அமர்ந்து பான் கார்க்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இது மட்டுமின்றி, பான் கார்டு தயாரிப்பதுடன், உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதை ஆன்லைனிலும் எளிதாக திருத்திக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

பான் கார்டு தயாரிப்பதற்கான முக்கிய ஸ்டெப்ஸ்
பான் கார்டைப் பெற, நீங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். பான் கார்டு இந்திய குடிமகன் மற்றும் வெளிநாட்டினரால் உருவாக்கப்படலாம். நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால், நீங்கள் PAN கார்டு NSDL (https://tin.tin.nsdl.com/pan/index.html) அல்லது UTITSL (https://www.pan.utiitsl.com/PAN/) இல் பெறலாம். ஜிஎஸ்டியை நீக்கிய பிறகு இந்த செயல்முறைக்கான கட்டணம் ரூ.93 மட்டுமே ஆகும். இந்த கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி வரைவோலை மூலம் டெபாசிட் செய்யலாம். கட்டணம் செலுத்திய பிறகு, நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும். 

அந்த படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, வயது, தொலைபேசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இதனுடன், நீங்கள் சில முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். NSDL/UTITSL அலுவலகத்திற்குச் சென்று இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் இல்லாமல், உங்கள் பான் கார்டை உருவாக்க முடியாது. எனவே செயல்முறையைத் தொடர, நீங்கள் கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களை அனுப்ப வேண்டும். இதை செய்த பிறகு, உங்களுக்கு ஒப்புகை எண் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் படிவத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். பத்து நாட்களுக்கு பிறகு உங்கள் பான் கார்டு நீங்கள் குறிப்பிட்ட முகவரியில் பெறலாம்.

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News