EPFO Update: தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் பல வித திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு உதவ பல பாதுகாப்பான திட்டங்கள் உள்ளன. மியூசுவல் ஃபண்டுகள், அரசாங்க திட்டங்கள், தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள், பங்குச் சந்தை என பல வித திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் காண்பதோடு எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பையும் பெற முடியும்.
இவை அனைத்தும் இருந்தாலும், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய சக்தியாக கை கொடுப்பது வருங்கால வைப்பு இதி தொகைதான். இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்க்கப்படும் தொகையின் மூலம், இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) கோடிகளில் சேர்க்க முடியும். இது எப்படி சாத்தியமாகும்? இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இபிஎஃப் சந்தாதாரர்கள் கவனத்திற்கு
ஒரு இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வு பெறுவதற்குள் கோடுகளில் பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? இதற்கு சில குறிப்பிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணி ஓய்வு வரை, இடைப்பட்ட காலத்தில் இந்த கணக்கில் இருந்து பணத்தை எடுக்காமல் இருந்தால் மட்டுமே ஓய்வு பெறும் போது கோடிக்கணக்கான தொகையை பிஎஃப் கணக்கில் சேர்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படி சில அத்தியாவசிய செலவுகளுக்காக நீங்கள் ஓய்வுபெறும் முன்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்தால், அதன் பிறகு, மாத சம்பளத்திலிருந்து இபிஎஃப் பங்களிப்பை (EPF Contribution) அதிகரித்து இதை ஈடுகட்டலாம். அதன் மூலம் பிஎஃப் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை ஈடு செய்து, ஓய்வின் போது கோடிக்கணக்கான ரூபாய் கார்ப்பசை குவிப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
இபிஎஃப் கணக்கில் கோடிக்கணக்கிலான கார்ப்பசை எப்படி உருவாக்குவது? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
50 ஆயிரம் சமபளத்தின் கோடிகளை ஈட்டுவது எப்படி?
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Salary) + அகவிலைப்படி (Dearness Allowance) சேர்த்து மொத்த மாதச் சம்பளம் ரூ. 50,000 என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வயது 30 என்றும் இபிஎஃப் வட்டி விகிதம் (EPF Interest Rate) 8.1 என்றும் வைத்துக்கொள்ளலாம். அவர் ஒவ்வொரு மாதமும் பிஎஃப் கணக்கில் 12 சதவீதத்தை செலுத்துகிறார். இதனுடன் ஆண்டு அடிப்படையில் அவரது சம்பளம் 5 சதவீதம் அதிகரித்தால், ஓய்வு பெறும் போது அவரது இபிஎஃப் கணக்கில் ரூ.2,53,46,997 இருக்கும். இந்த தொகை ஓய்வுக்குப் பிறகு அவரது பொருளாதார சுமைகளை குறைத்து வாழ்க்கையை எளிதாக்கும்.
EPF Account: எவ்வளவு பங்களிக்க வேண்டும்?
இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் தங்கள் சம்பளத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கின்றது.பணியாளர்களின் பங்களிப்பு முழுதும் அவரது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. எனினும், நிறுவனத்தின் 12% -இல், 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS), 3.67% இபிஎஃப் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகின்றன. அதிக கார்ப்பஸ் பெற இபிஎஃப் பங்களிப்பை வேண்டுமானால் அதிகரித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஃப்-ல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு (EPF Amount) ஆண்டுதோறும் 8.25 சதவீத வட்டியை அரசு நிர்ணயித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகள் என்ன?
- பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.
- EPFO விதிகளின்படி, பணியாளர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஓய்வூதியம் பெற உரிமை பெறுகிறார்கள்.
- இந்தத் திட்டம் 58 வயதை எட்டிய தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களுக்கான உத்தரவாதத்தை அளிக்கின்றது.
- ஒரு பணியாளர் 9 ஆண்டுகள் மற்றும் 6 மாத சேவை முடித்திருந்தாலும் அது 10 ஆண்டுகளாக கணக்கிடப்படுகிறது.
மேலும் படிக்க | சுகாதாரக் காப்பீட்டில் வரிச் சலுகை கிடைக்குமா? முக்கிய முடிவு விரைவில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ