வரும் அக். 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் தந்தேரஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தந்தேரஸ் பண்டிகைக்கு தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்புமிக்க பொருட்களை மக்கள் வாங்கி குமிப்பார்கள்.
தீபாவளி குறித்து பரவலாக அனைவருக்கும் தெரியும் என்றாலும் தந்தேரஸ் குறித்து பெரிதும் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது ஹிந்து நாட்காட்டியில், அஸ்வினி மாதத்தின் 13ஆவது நாளான கிருஷ்ண பக்ஷா தினத்தில் கொண்டாப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, தன்வந்திரி என்னும் தெய்வத்தை வணங்கும் வழக்கம். அவர் ஆயுர் வேதத்தின் தலைமகளாக விளங்குகிறார்
2016ஆம் ஆண்டு முதல், தந்தேரஸ் பண்டிகை அன்று தேசிய ஆயுர்வேத தினமும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், வட இந்தியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தந்தேரஸ் தினத்தை முன்னிட்டு தங்க நகைகள், தங்க, வெள்ளி காசுகள், புது பாத்திரங்களை மக்கள் வாங்குவது வழக்கமாக உள்ளது.
அது ஏன் வாங்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தங்கம், வெள்ளி போன்றவற்றை தற்போது கடைகளில் மட்டுமின்றி, ஆன்லைன் மூலமாகவும் பாதுகாப்பாக வாங்கலாம். அதாவது, இந்த டிஜிட்டல் யுகத்தில் நீங்கள் டிஜிட்டல் தங்கத்தையும் வாங்கலாம்.
மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!
தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் போன்றவற்றை வாங்குவதை போன்று, இந்த டிஜிட்டல் தங்கமும் உங்களின் வீட்டிற்கு செல்வத்தை கொண்டுவரலாம். அதுவும் நீங்கள் கூகுள் பே, பேடிஎம் மூலமே இந்த டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும்.
கூகுள் பே மூலம் எப்படி தங்கம் வாங்குவது?
- கூகுள் பே செயலியை திறந்து New ஆப்ஷனை அழுத்தவும்.
- Search பாகஸில் "கோல்ட் லாக்கர்" என்று தேடவும்.
- "கோல்ட் லாக்கர்" ஆப்ஷனை அழுதி, பின்னர் BUY ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- தங்கத்தின் சந்தை மதிப்பை வரியுடன் பார்க்கலாம். நீங்கள் தங்கத்தை வாங்க பரிவர்த்தனையை தொடங்கியவுடன், அந்த விலை 5 நிமிடங்களுக்கு தக்கவைக்கப்படும். அதன்பின், விலை ஏறலாம், குறையவும் செய்யலாம்.
- உங்களுக்கு ஏற்ற பண பரிவர்த்தனை முறையே தேர்வு செய்து, டிஜிட்டல் தங்கத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
- பின்னர், அந்த லாக்கரில் தங்கத்தின் இருப்பு காட்டப்படும். அதனையடுத்து, மார்க்கெட் விலைக்கு நீங்கள் அதை எந்த நேரத்திலும் விற்கவும் செய்யலாம்.
பேடிஎம் மூலம் தங்கம் வாங்குவது எப்படி?
- பேடிஎம் செயலியை திறந்து, All Service ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- Search பாகிஸில் தங்கம் என்று தேடவும்.
- தங்கத்தை விலையின் அடிப்படையிலோ அல்லது கிராமின் அடிப்படையலோ வாங்கிக்கொள்ளலாம். அதற்கு 'Buy in amount or in gram' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- பேடிஎம் வாலட், UPI, கிரேடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணவரித்தனை செய்து தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றம்: திரிகோண ராஜயோகத்தால் பண மழையில் நனையப்போகும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ