How To Update Ration Card: உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருந்து, சமீபத்தில் நீங்கள் திருமணம் செய்துகொண்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், இந்த செய்தி ரேஷன் கார்டு புதுப்பிப்பு தொடர்பானது. மேலும் இந்த ரேஷன் கார்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் இருப்பது அவசியம் ஆகும். ஆனால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திலோ புதிய திருமணம் நடந்து, குடும்பத்தில் புதிதாக ஒருவர் வந்திருந்தால், அந்த உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் நீங்கள் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதற்கான செயல்முறை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்ப்பது? | How to add new member name in Ration Card
புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். திருமணமான ஒருவர் என்றால் புதிய ரேஷன் கார்டு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தும் ரேஷன் அட்டையில் அவர்களுடைய பெயரை இணைக்க வேண்டும். அரசு தரும் சலுகைகள் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றைப் பெற ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.
மேலும் படிக்க | PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது
இந்நிலையில் புதிய உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பதற்கு முன்பு, முதலில் அந்த உறுப்பினரின் ஆதார் அட்டையில் பெயரை புதுப்பிக்க வேண்டும். இதற்கு, அந்த உறுப்பினரின் ஆதார் அட்டையில் தந்தை பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மற்ற வேண்டும். அதேசமயம் குடும்பத்தில் குழந்தை பிறந்திருந்தால், அவரது பெயரை சேர்க்க தந்தையின் பெயர் அவசியமாகும். ஆதார் புதுப்பிக்கப்பட்ட பிறகு, மாற்றப்பட்ட ஆதார் அட்டையின் புகைப்படத்துடன் உணவுத் துறை அதிகாரியிடம் ரேஷன் கார்டில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
மேற்கண்ட ஆதார் அட்டை செயல்முறையை முடித்த பிறகு, உணவுத் துறை அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். வீட்டில் அமர்ந்திருக்கும் புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு முதலில் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டிலிருந்தபடியே இந்த வேலையைச் செய்துக் கொள்ளலாம். பல மாநிலங்களில் இந்த வசதி போர்ட்டல் மூலம் வழங்கப்படுகிறது, எனினும் பல மாநிலங்களில் இந்த வசதி தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு திருத்தம் மற்றும் புதிய கார்டு விண்ணப்பிக்கும் முறை:
* https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகளுக்கு கீழ் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
* அதன் பின் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து பதிவு செய்து பிற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | ரூ.20 ஆயிரத்தில் தொடங்கிய தொழில்-இப்போ 200 கோடி மதிப்பு! இந்த கதையை படிங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ