8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக தற்போது அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. இதனிடையே தற்போது 8வது சம்பள கமிஷன் குறித்து மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. எனவே நீங்களும் ஒரு அரசு ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் என்பிஎஸ் தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூடிய விரைவில் மத்திய அரசு 8வது ஊதியத்தை அமல்படுத்தலாம். ஏனெனில் அடுத்த ஆண்டு நாட்டில் தேர்தல் நடக்கவிருக்கிறது, இதன் காரணமாக வரும் 2024 ஆம் ஆண்டில் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதன் மூலம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஊதியக் குழு அமலுக்கு வருகிறது
7வது ஊதியக்குழு கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டு பின்னர் 2016ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்த்துள்ளது. இப்போது மீண்டும் அரசு ஊழியர்கள் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்றே கூறலாம், ஏனெனில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஊதியக் குழு அமலுக்கு கொண்டு வரலாம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் ஜாக்பாட்.. உடனே இதை படியுங்கள்
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18000
தற்போது ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் சம்பளம் பன்மடங்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
8வது சம்பள கமிஷன் பற்றி எந்த யோசனையும் இல்லை
இதயனிடையே ராஜ்யசபாவில் 8வது ஊதியக்குழு தொடர்பான நிலவரத்தை விளக்கிய பங்கஜ் சவுத்ரி, தற்போது இது குறித்து எந்த திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் சம்பள கமிஷன் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமைக்கப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து விவாதிப்பது சரியல்ல. இதனுடன், அதைப் பரிசீலிக்கும் திட்டமும் இப்போதைக்கு இல்லை என்றார். மேலும் கூறிய அவர், வரும் காலத்தில் பர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. ஆனால் அது எப்போது வரும் என்பதை இப்போது கூறுவது சரியல்ல என்றார்.
புதிய பார்முலாவை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது
கடந்த 2016ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை (7th Pay Commission) மத்திய அரசு அமல்படுத்தியது. இப்போது 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அறிக்கையின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய 8வது ஊதியக் குழுவை அமைக்கும் எண்ணம் இல்லை. ஆனால் இதையும் மீறி புதிய ஃபார்முலா தயாராகி வருகிறது. எனவே மத்திய ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும்.
ரேட்டிங்கிற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்
பர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான அமைப்பில், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மதிப்பீடு கிடைக்கும், அதன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகளை மற்றும் ஓய்வூதியத்தின் கட்டமைப்பை மாற்ற புதிய கமிஷன் அமைக்க தேவையில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ