DA Hike: காத்திருந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி... அகவிலைப்படியை உயர்த்தும் மாநில அரசு!

Rajasthan DA Hike: சத்தீஸ்கர் அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், மற்றொரு காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2023, 06:10 AM IST
  • அகவிலைப்படியை உயர்த்தும் திட்டத்திற்கு முதல்வர் கெலாட் ஒப்புதல்.
  • அகவிலைப்படி விகிதம் 396 சதவீதத்தில் இருந்து 412 சதவீதமாக உயரும்.
  • இதற்கு முன் 2022 அக்டோபரில் ராஜஸ்தான் ஊழியர்களின் அகவிலைப்படி விகிதங்கள் திருத்தப்பட்டது.
DA Hike: காத்திருந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி... அகவிலைப்படியை உயர்த்தும் மாநில அரசு! title=

Rajasthan DA Hike: கடந்த 6 மாதங்களாக அகவிலைப்படியை உயர்வுக்காக காத்திருக்கும் ராஜஸ்தானின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தும் திட்டத்திற்கு முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். 

அவர்கள் இந்தாண்டு ஜனவரி முதல் இந்த உயர்த்தப்பட்ட கொடுப்பனவைப் பெறுவார்கள். அறிக்கையின்படி, 5ஆவது ஊதியக் குழு மற்றும் ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (திருத்தப்பட்ட ஊதியம்) விதிகள், 1998ன் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான இந்த உத்தரவுக்கு முதல்வர் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

டிஏ 412 சதவீதம் அதிகரித்துள்ளது

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவால், மாநிலத்தில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விகிதம் 396 சதவீதத்தில் இருந்து 412 சதவீதமாக உயரும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படி ஓய்வூதியதாரர்களுக்கான ரொக்கம் கிடைக்கும், அதே நேரத்தில் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்த முடிவு மாநில ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அரசு கூறியது.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் தொடர்பான முக்கிய செய்தி! லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

9 மாதங்களுக்குப் பிறகு சம்பளத் திருத்தம்

முன்னதாக அக்டோபர் 2022இல், ராஜஸ்தான் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விகிதங்களைத் திருத்தியது. அப்போது 381 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 396 ஆக உயர்த்தப்ப ட்டது.இதையடுத்து, தற்போது 412 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கரிலும் டிஏ உயர்வு

ராஜஸ்தான் அரசுடன், சத்தீஸ்கர் அரசும் தனது ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல், அகவிலைப்படியை (DA) 5 சதவீதம் அதிகரித்துள்ளார். இதன் மூலம், முன்பு 33 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. முழு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி காலத்தை 33 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக அரசு குறைத்துள்ளது.

இதனுடன், விஆர்எஸ் எடுக்கும் காலம் 20 ஆண்டுகளில் இருந்து 17 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளால் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, இரு மாநிலங்களின் தேர்தல்களும் இந்தாண்டு இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. 

அடுத்தாண்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில், காங்கிரஸின் கையில் இருக்கும் இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் அதிக கவனத்தை பெறுகின்றன. ஆளும் காங்கிரஸ் அரசும் வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து வருகிறது. 

மேலும் படிக்க | எந்த பங்கு நல்ல வருவாய் தரும்? எஸ்பிஐ இருக்கும்போது கவலை ஏன்? டிப்ஸ் தரும் நிபுணர்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News