அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: GPF வட்டி விகிதத்தை அறிவித்தது அரசு!!

GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதியின் (GPF) வட்டி விகிதம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி முதல் மார்ச் 2024 வரையிலான காலாண்டில், ஜிபிஎஃப் மீதான வட்டி 7.1% என்ற விகிதத்தில் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2024, 01:07 PM IST
  • GPF என்றால் என்ன?
  • இதன் வட்டி விகிதம் என்ன?
  • EPF வட்டி விகிதம் என்ன?
அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: GPF வட்டி விகிதத்தை அறிவித்தது அரசு!! title=

GPF Interest Rate: நீங்கள் அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் அரசுப் பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சமீபத்தில் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் (SSY) வட்டி விகிதத்தை அதிகரித்த அரசு, தற்போது மீண்டும் ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதியின் (GPF) வட்டி விகிதம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி முதல் மார்ச் 2024 வரையிலான காலாண்டில், ஜிபிஎஃப் மீதான வட்டி 7.1% என்ற விகிதத்தில் கிடைக்கும். அதாவது, 7.1% வட்டி விகிதம் (Interest Rate) மார்ச் 31, 2024 வரை நடைமுறையில் இருக்கும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது

GPF-ன் கீழ், அரசு ஊழியர்கள் (Government Employees) பணியில் இருக்கும் போது தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள். இது ஒரு முக்கியமான திட்டமாக உள்ளது. இதில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை டெபாசிட் செய்ய வேண்டும். GPF இல் கிடைக்கும் வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இது தவிர, வருங்கால வைப்பு நிதியின் (PF) வட்டி விகிதம் ஆண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ​​அதில் மாற்றங்களை செய்கிறது. 

இந்த வட்டி விகிதம் 31 மார்ச் 2024 வரை இருக்கும்

ஜனவரி 2, 2024 அன்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) வெளியிட்ட அறிவிப்பின்படி, 2023-2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் GPF மீதான வட்டி 7.1% என்ற விகிதத்தில் கிடைக்கும். இந்த விகிதம் ஜனவரி 1, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை பொருந்தும். நடப்பு காலாண்டில் GPF மற்றும் இணைக்கப்பட்ட நிதிகளுக்கான வட்டி விகிதங்களை அதே அளவில் அரசாங்கம் வைத்துள்ளது.

GPF என்றால் என்ன?

பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி ஆகும். அரசுத் துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை GPFக்கு வழங்கத் தகுதியுடையவராகிறார். GPF-ல் டெபாசிட் செய்யப்பட்ட பணம், முதிர்ச்சியுடன் ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு கிடைக்கின்றது. நிதி அமைச்சகம் (Finance Ministry) ஒவ்வொரு காலாண்டிலும் GPF இன் வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது.

மேலும் படிக்க | ITR: புதிய வரி விதிப்பு முறையில் இருந்து பழைய வரி விதிப்பு முறைக்கு மாற வேண்டுமா..!!

இபிஎஃப் வட்டி விகிதம் (EPF Interest Rate)

 

EPF இன் வட்டி விகிதம் EPFO ​​ஆல் ஆண்டு அடிப்படையில் மாற்றப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் PF இன் வட்டி விகிதம் 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. EPFO முழு நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்த பிறகு, அது மாத இறுதியில் மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

2024 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றியுள்ளது. மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் காலத்திற்கான சிறு சேமிப்பு திட்டங்கள் (Small Saving Schemes) மற்றும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கான (Post Office Saving Schemes) வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டத்தில் அரசாங்கம் 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது தவிர, சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) மீதான வட்டி விகிதமும் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அதன் வட்டி விகிதம் தற்போது 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் வரிச் சலுகைகள்... சர்ப்ரைஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News