Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டி அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?

Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 17, 2024, 04:31 PM IST
  • ரீபண்ட் கிடைக்க தாமதமானால் என்ன செய்வது?
  • ரீபண்ட் கிடைக்க தாமதம் ஆக காரணம் என்ன?
  • ரீபண்ட் கிடைக்காவிட்டால் எங்கு புகார் அளிக்க வேண்டும்?
Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டி அளிக்கும்: எவ்வளவு தெரியுமா? title=

Income Tax Refund: வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிட்டு அதற்கான ரீஃபண்டுக்காக காத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும். இந்த கால அவகாசம் கடந்தும் உங்கள் ரீப்ஃண்ட் இன்னும் வரவில்லை என்றால், அதில் உங்களுக்கு ஒரு லாபமும் உள்ளது. 

ரீஃபண்ட் தாமதமாக கிடைக்கும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) அரசாங்கம் வட்டி அளிக்கிறது. ரீஃபண்ட் வரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ரீபண்ட் கிடைக்க தாமதமானால் உங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

தாமதமான ரீபண்டுக்கு வட்டித்தொகையை அளிக்கும் அரசாங்கம்

ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்த பலர் இன்னும் ரீப்ஃண்ட் வராமல் அதற்காக காத்திருக்கிறார்கள். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்தும் உங்களுக்கு இன்னும் ரீபண்டு கிடைக்கவில்லை என்றால் கவலை கொள்ளவேண்டாம். உங்கள் பணத்தை வட்டியுடன் சேர்த்துப் பெறுவீர்கள். உங்கள் வரியின் ரீபண்டை வழங்குவதில் அரசாங்கம் தாமதம் செய்தால், அந்த தொகையின் மீதான வட்டியையும் அரசாங்கம் உங்களுக்கு வழங்கும். ரீபண்ட் தொகையை பெறும் தேதி வரையிலான தொகையைச் சேர்த்து இது வழங்கப்படுகிறது. எனினும், ITR ஐ உரிய தேதிக்குள் தாக்கல் செய்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பணம் கிடைக்கும்

ரீபண்ட் தொகை வராதபட்சத்தில் அரசாங்கம் எவ்வளவு வட்டியை அளிக்கும்? இந்த கேள்வி அனைவருக்கும் இருக்கும். அரசு வரி செலுத்துவோருக்கு ஒவ்வொரு மாதமும் 0.5% அதாவது ஆண்டுக்கு 6% வட்டியை அளிக்கும். ஏப்ரல் 1 முதல் ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறும் தேதி வரை இந்த வட்டி வழங்கப்படும். இருப்பினும், இதில் மற்றொரு விதியும் உள்ளது. அதாவது, வரிசெலுத்துவோரின் ரீபண்ட் தொகை அவர்களது மொத்த வரியில் 10% க்கும் குறைவாக இருந்தால், எந்த வட்டியும் கிடைக்காது.

ரீபண்ட் கிடைக்க தாமதமானால் என்ன செய்வது?

- வருமான வரித் துறையிடமிருந்து (Income Tax Department) ரீபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், தவறுகளைச் சரிசெய்ய ஐடி துறையால் ஏதேனும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை முதலில் செக் செய்யவும்.

- அப்படி தவறு குறித்த மின்னஞ்சல் வந்திருந்தால், அதை முதலில் சரி செய்யவும்.

- அத்தகைய தகவல் எதுவும் இல்லை என்றால், https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html என்ற வருமான வரித்துறையின் போர்டலுக்குச் சென்று ஸ்டேடசை செக் செய்யவும்.

- வலைப்பக்கத்திற்கு சென்றவுடன் பக்கத்தை ஸ்க்ரோல் டவுன் செய்தால், உங்களிடம் இரண்டு வகையான தகவல்கள் கேட்கப்படும்.

- ஒன்று பான் எண், இரண்டாவது ரீபண்ட் நிலுவையில் உள்ள ஆண்டு.

- இந்த விவரங்களை உள்ளிடவும். 

-  இதன் பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். 

- இதற்குப் பிறகு, ப்ரொசீட் என்பதைக் கிளிக் செய்யவும். 

- ரீபண்ட் ஸ்டேட்டஸ் உங்கள் முன் தோன்றும். 

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்... அட்டகாசமான அப்டேட் இதோ

ரீபண்ட் கிடைக்க தாமதம் ஆக காரணம் என்ன?

- வருமான வரி கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபை செய்யாமல் இருப்பது
- வருமான வரித்துறை அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலளிக்காமல் இருப்பது
- TDS பொருந்தாமல் இருப்பது
- கணக்கு எண் அல்லது ஐஎஃப்எஸ்சி குறியீடு தவறாக இருப்பது
- வங்கிக் கணக்கு செயலில் இல்லாமல் இருப்பது
- பான் எண் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருப்பது
- பான் கார்டில் உள்ள பெயர் வங்கிக் கணக்கில் உள்ள பெயருடன் பொருந்தாமல் இருப்பது

ஆகியவை முக்கிய காரணகளாக இருக்கலாம். 

ரீபண்ட் கிடைக்காவிட்டால் எங்கு புகார் அளிக்க வேண்டும்?

ரீபண்ட் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படாமல் ரீபண்டும் வராமல் இருந்தால், வரி செலுத்துவோர் அதைப் பற்றி incometax.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம். இது தவிர, வருமான வரித் துறையின் 1800-103-4455 என்ற இலவச எண்ணையும் அழைத்து புகார் செய்யலாம். இந்த எண்ணை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைக்கலாம். இது தவிர, வரி செலுத்துவோர் தங்கள் புகாரை இ-ஃபைலிங் போர்ட்டலிலும் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News