அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: 18 மாத அகவிலைப்படி அரியர்..... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

7th Pay Commission: பிப்ரவரி மாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய ஊழியர்கள் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.

7th Pay Commission, DA Arrears Latest News: டிஏ அரியர் வழங்கப்பட்டால் எவ்வளவு பணம் கிடைக்கும்? இதில் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் (Pay Scale) பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும். லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவையே ஆகும். பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.

1 /10

7வது ஊதியக் குழு: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டிஏ நிலுவைத் தொகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அது குறித்த ஒரு முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /10

உலக மக்களை கொரோனா நோய்த்தொற்று ஆட்கொண்டபோது, உலக நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டன. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. இந்தியாவிலும் அசாதாரண சூழல் ஏற்பட்டது.

3 /10

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல வித முயற்சிகளை எடுத்தது. அதில் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது.

4 /10

முடக்கப்பட்ட அகவிலைப்படி நலிந்த பிரிவு மக்கள் மற்றும் அதிக தேவையில் உள்ளவர்களுக்கான நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில், மத்திய அரசு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாதங்களுக்கு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை முடக்கியது. நிலைமை சற்று சீரானவுடன் முடக்கம் நீக்கப்பட்டது.

5 /10

பிப்ரவரி மாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய ஊழியர்கள் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள். மோடி அரசின் இந்த முடிவால், கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.

6 /10

பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மோடி அரசு டிஏ அரியர் குறித்து ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, 2025 அன்று சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

7 /10

டிஏ அரியர் வழங்கப்பட்டால் எவ்வளவு பணம் கிடைக்கும்? இதில் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் (Pay Scale) பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.

8 /10

லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவையே ஆகும். பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.

9 /10

பட்ஜெட்டில் டிஏ அரியர் தொகை அறிவிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வரவில்லை. எனினும், பட்ஜெட் 2025 -இல் இதில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்களும் ஒய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.