Saif Ali Khan Got Stabbed By Intruder : பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக நிறைந்த பாலிவுட் நடிகரின் வீட்டிற்குள்ளேயே நுழைந்த ஒரு திருடன், திருட முயற்சி செய்ததோடு இல்லாமல், அதை தடுக்க வந்த நடிகரையும் தொடர்ந்து 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி இருக்கிறான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து வாங்கிய பாலிவுட் நடிகர்!
பாலிவுட்டில் பிரபல ஸ்டாராக விளங்குபவர், சயிஃப் அலி கான். பல்வேறு ஷாம்பூ விளம்பரங்களிலும், சில ஹிட் ஆன படங்களிலும் இவரை பார்த்திருப்போம். குறிப்பாக சமீபத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘தேவாரா: பாகம் 1’படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.
சயிஃப் அலி கானின் இல்லம் மும்பையில் உள்ள பாந்த்ரா நகரில் உள்ளது. தனது இல்லத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் இன்று அதிகாலை (ஜனவரி 16) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, இந்த சம்பவம், அதிகாலை 2.30 முதல் 3.30க்குள் நடந்திருக்கலாம் என கூறபப்டுகிறது.
வீட்டில் இருப்பவர்கள் உறங்குகையில் அந்த திருடன் வீட்டினுள் நுழைந்ததாகவும், இதைப்பார்த்த சயிஃப் அலி கானுக்கும் அவனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், அந்த திருடன் 6 முறை சயிஃபை கத்தியால் குத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி..!
சயிஃப் அலி கானுக்கு கத்தி குத்து ஏற்பட்டதை அடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இப்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தொிவித்துள்ளனர்.
சயிஃப் அலி கான் வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதை தொடர்ந்து, பாந்த்ரா நகர காவலர்கள் இது குறித்து FIR பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவரது இல்லத்தில் பணிபுரியும் 3 பேரிடமும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவிப்பு:
சயிஃப் அலி கானின் தரப்பில் இருந்து சமூக வலைதள பக்கங்களில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், சயிஃப் அலி கானின் வீட்டில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இப்போது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வு பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்துள்ள வேளையில், ஊடகத்தினரும் ரசிகர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை இது குறித்து விசாரணை நடத்தி வரும் வேலையில், இதில் ஏதேனும் முக்கிய திருப்பங்கள் இருந்தால் அதனை தெரிவிப்போம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சயிஃப் அலி கானுக்கு இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதால் பாலிவுட் திரையுலகமே தற்போது பரபரத்திருக்கிறது. சயிஃபின் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
சல்மான் கான் வீட்டிலும்..
பல ஆண்டுகளாக, நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு Z+ Security காெடுக்கப்பட்டது. இவர் உடுத்தும் ஆடைகள், கார், வீட்டின் கதவுகள் என அனைத்திலும் புல்லட் ப்ரூஃப் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திரையுலகின் டாப்-ஆன இடத்தில் இருக்கும் இது போன்ற நடிகர்களுக்கு, உயிருக்கு அச்சுறுத்தலாக நடைபெறும் விஷயங்கள் நடைபெறுவது ரசிகர்களையும் காவல் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | பிரபல நடிகர் மர்ம மரணம்! ஹோட்டல் அறையில் கிடந்த பிணம்-நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ